வீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை

amman

ஒருவரது வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் எண்ணிலடங்கா பல பிரச்சனைகள் வரும். பண வரவு குறையும், மருத்துவ செலவு அதிகரிக்கும், வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகும். இப்படி பல பிரச்சனைகள் சுற்றி சுற்றி அடிக்கும். வீட்டில் உள்ள தரித்திரத்தை விரட்ட ஒரு மிக சிறந்த வழி இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பஞ்சமி திதி அன்று விரதமிருந்து தீப வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து விதமான தரித்திரங்களையும் விரட்ட முடியும். அமாவாசை முடிந்த ஐந்தாவது நாளிலும், பவுர்ணமி முடிந்த ஐந்தாவது நாளிலும் வருவதே பஞ்சமி திதி.

வடமொழியில் பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஐந்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

Amavasya-Poornima

பல சிறப்புக்கள் மிக்க பஞ்சமி திதியன்று காலை முதல் மாலை வரை விரதமிருந்து, ஐந்து வகையான எண்ணெய்கள் கொண்டு ஐந்து முக விளக்கினை ஏற்ற வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும்படி பஞ்சமி தேவியை நினைத்துக்கொண்டு விளக்கின் ஓர் முகத்தை பார்த்தபடியே கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ

deepam

இந்த பூஜையின்போது சுவாமிக்கு பழம், கற்கண்டு ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை முடித்துக்கொள்ளலாம். இந்த பூஜையை முறையாக செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தரித்திரங்கள் விலகி நிம்மதி நிலைக்கும்.

இதையும் படிக்கலாமே:
எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஜோதிட குறிப்புகள் மற்றும் மந்திரங்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tharithiram neenga pariharam in Tamil. One can get away from Tharithiram by worshipping Goddess Panchami Devi.