எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் தெரியுமா ?

vilaku-2

பொதுவாக நாம் கோவில்களில் நெய்தீபம் ஏற்றுவது வழக்கம். சிலர் நல்லெண்ணெய் கொண்டும் விளக்கேற்றவார்கள். ஆனால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய எண்ணெயை கொண்டு வெளிக்கேற்றவதால் நாம் அதிக பலன்களை பெறலாம். வாருங்கள் எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றவேண்டும் என்று பார்ப்போம்.

deepam

விநாயகர்

முழு முதற் கடவுளான விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.

மகாலட்சுமி

செல்வதை வாரி வழங்கும் மகாலட்சுமிக்கு பசுநெய் கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.

- Advertisement -

deepam

 

குலதெய்வம்

குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்திச்செல்லும் குலதெய்வத்திற்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் போன்றவற்றை கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.

பைரவர்

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவருக்கு நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.

அம்மன்

உலகையே காத்து ரட்சிக்கும் அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் போன்றவற்றை கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.

deepam

பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்

தமிழ் கடவுளான முருகனுக்கும், காக்கும் கடவுளான பெருமாளுக்கும், கேட்ட வரங்களை கேட்டபடியே அருளும் ஈசனுக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதால் நல்ல பலன் உண்டு.