சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி

sidhargal

இந்த உலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்கள் நம் சித்தர் பெருமக்கள். அவர்களை தரிசித்து அருள் பெற்று குருவாய் ஏற்று வாழ்ந்து வந்தால் நமக்கு எந்த இடையூறும் நேராது. பல அற்புத மகிமைகளை கொண்ட சித்தர்களை காண்பதென்பது அவ்வளவு எளிதான விடயம் இல்லை என்றாலும் அதற்கு சில வழிகள் இருக்கிறது. அதில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

siddhar

நிறைந்த அம்மாவாசை அன்று இரவு 8 மணி வாக்கில் ஒரு அறையில் தூய்மையான பசு நெய்யில் தாமரை நூல் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். பின்பு நிறைந்த குடத்தில் இருந்து ஒரு காசிச்சொம்பில் நீர் கொண்டுவந்து அதை தீபத்திற்கு முன்பாக வைக்கவேண்டும். பின் அந்த சொம்பிற்கு முன்பு நம்மால் முடிந்த பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.

பிறகு சிறிது தூரம் தள்ளி அமர்ந்து அந்த தீபத்தை பார்த்தவாறு நமக்கு இஷ்டமான சித்தரின் பெயரை மனதில் நிறுத்திக்கொண்டு கீழே உள்ள மந்திரத்தை அமைதியாக கூற வேண்டும்.

sidhar

மந்திரம்:
:ஒம் சிங் ரங் அங் சிங்:

- Advertisement -

தொடர்ந்து ஒரு மணி நேரம் இந்த மந்திரத்தை கூற வேண்டும். அதன் பிறகு சொம்பில் உள்ள நீரையும் பழங்களையும் அருந்த வேண்டும். அம்மாவாசை அன்று ஆரமித்து தொடர்ந்து 90 நாட்கள் இதை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சித்தர்களை தரிசிக்கலாம்.

sidhar

இதையும் படிக்கலாமே:
புத்தியை கொண்டு அனைத்தையும் சாதிக்க உதவும் தன்வந்திரி மந்திரம்

இந்த 90 நாட்களும் மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். மாமிசம் நிச்சயம் அருந்த கூடாது. சித்தரை காண வேண்டும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் குறையாமல் சித்தரை எப்போதும் நினைத்துக்கொண்டே நம் தினசரி வேலைகளை செய்யலாம்.