குலதெய்வத்திடம் கனவில் பேசுவதற்கான வழிகள்

kula-dheiva-kovil

சிலரது வாழ்வில் எண்ணிலடங்கா பல துன்பங்கள் வரும். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை அறியாமல் ஒருகட்டத்தில் தவித்துக்கொண்டு நிற்போம். அத்தகைய தருணங்களின் நமக்காக உதவி செய்ய நம் குலதெய்வம் நிச்சயம் தயாராக இருக்கும். ஆகையால் முறையாக வழிபட்டு குலதெய்வத்திடம் பேசினோமானால் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை குல தெய்வம் நிச்சயம் சொல்லும். வாருங்கள் குலதெய்வத்திடம் பேசுவது எப்படி என்று பார்ப்போம்.

kula dheivam

குலதெய்வத்தின் தரிசனத்தை நேரில் பெறமுடியவில்லை என்றாலும் கனவில் பெறுவதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தின் மூலம் குலதெய்வத்திடம் பேசலாம்.

மந்திரத்தை ஜெபதற்கான முறை:
தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையை பச்சைக் கற்பூரம் கலந்த நீரால் சுத்தம் செய்து பின்னர் விளக்கேற்றி ஊதுபத்தி சாம்பிராணி ஆகியவற்றை ஏற்றரவும். பின்னர் குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொண்டு கற்பூர ஆரத்தி காட்டவும். அதன் பின்னர் ஒரு வெள்ளை துணியை தரையில் விரித்து கிழக்கு முகமாக அமர்ந்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறவும்.

kula dheivam

மந்திரம்:

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா||

இந்த மந்திரத்தை 45 அல்லது 90 நாட்களுக்குள் 51000 முறை ஜெபித்தால் சித்தியாகும். இதை தினமும் ஒரே எண்ணிக்கையில் தான் ஜெபிக்க வேண்டும். 45 நாட்களுக்குள் ஜெபிக்க நினைப்பவர்கள் 44 நாட்களுக்கு 1133 எண்ணிக்கையும் 45 வது நாள் 1148 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும். 90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு 566 எண்ணிக்கையும் 90 வது நாள் 626 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும்.


உங்களுக்கு நேரம் இருந்தால் இதையும் படியுங்கள்:
குலதெய்வ வழிபாட்டின் அற்புத பலன்களும் குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறையும்


அதன் பிறகு இரவில் தூங்கும் முப்பு குலதெய்வத்தை நினைத்து கொண்டு ஊதுபத்தி ஏற்றிவைத்து விட்டு, ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை 108 முறை ஜெபித்துவிட்டு, செம்பில் உள்ள தண்ணீரை குடிக்கவேண்டும். அதன் பிறகு குலதெய்வம் தன் கனவில் வந்து இந்த விஷயத்திற்கான தீர்வை சொல்லவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.

kula dheivam

இந்த பூஜை காலத்தில் ஒருவர் உடலளவிலும், மனதளவிலும் 100% சுத்தமாக இருக்கவேண்டும். இல்லை என்றல் பூஜை செய்வதில் பலனே இல்லை. இதை முறையாக செய்தால் ஏதோ ஒரு ரூபத்தில் குலதெய்வம் உங்கள் கனவில் வந்து உங்களுடைய பிரச்சைக்கான தீர்வை நிச்சயம் சொல்லும்.