சமையலுக்கு பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் 1 வருடம் வரை கறுத்துப் போகாமல், சுவை மாறாமல் இருக்க இப்படி செய்யலாமே!

puli-tamarind1
- Advertisement -

நாம் அன்றாடம் பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் அதில் இருக்கும் நிறமானது நாளடைவில் கறுத்து போக ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் விதைகள் இருக்கும் புளியை நாம் வாங்கி வைக்கும் பொழுது அதில் வண்டுகளும், புழுக்களும் வர ஆரம்பித்துவிடும். புளி வகைகளில் விதைகள், ஓடுகள், நார் அனைத்தும் கலந்து விற்கப்படும் பச்சை புளி மற்றும் இவையெல்லாம் நீக்கப்பட்ட புளி என்று இரண்டு வகைகள் உண்டு. விதைகள், ஓடு இருக்கும் புளி வெகு சீக்கிரமாகவே கெட்டுப் போக வாய்ப்புள்ளது. அவற்றை எப்படி 1 வருடம் வரை கெட்டுப் போகாமல், சுவை மாறாமல், பிரஷ்ஷாக பாதுகாப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

puli-tamarind

மொத்தமாக புளியை வாங்கி அதிக காலம் வரை ஸ்டோர் செய்ய நினைப்பவர்கள் வாங்கியவுடன் முதலில் அவற்றில் இருக்கும் ஓடு, நார் மற்றும் புளி கொட்டைகள் இவற்றை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து விதவிதமான சைஸ்களில் உருண்டை பிடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நாம் ரசத்திற்கு ஒரு அளவும், கார குழம்பிற்கு ஒரு அளவும், சாம்பார் வைக்க ஒரு அளவும் என்று டிசைன் டிசைனாக அளவுகள் வைத்து தான் சமைப்பது வழக்கம்.

- Advertisement -

அதனால் அதற்கேற்ப ஒவ்வொரு உருண்டைகளையும் பிடித்து வைத்துக் கொண்டால் வறண்டு போகாமல் எடுத்து உபயோகப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். அதே சமயத்தில் புளியை இப்படி ஸ்டோர் செய்யும் பொழுது அந்த நசநசபுத்தன்மை இல்லாமல் சுத்தமாகவும் இருக்கும். உருண்டை பிடித்த இந்த புளிகளில் பாதி அளவிற்கு இப்போது ஒரு கன்டெய்னரில் ஸ்டோர் செய்ய வேண்டும். அதற்கு நாம் பீங்கான் ஜாடியை பயன்படுத்த வேண்டும்.

uppu jaadi

பீங்கான் ஜாடியில் சிறிதளவு கல் உப்பை போட்டு கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த உருண்டைகளை அடுக்கி வையுங்கள். மீண்டும் அதன் மேல் கல் உப்பு தூளை தூவி கொள்ளுங்கள். இப்படி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் போதும் ஒரு மாதம் வரை சட்டென புளியை கரைத்து சமையல் செய்து விடலாம். புளி சீக்கிரமாகவும் கரைந்து விடும். ஆனால் குழம்பு வைக்கும் பொழுது உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும். அதனை மறந்து விடாதீர்கள்.

- Advertisement -

பீங்கான் ஜாடியை தவிர வேறு எதை பாத்திரத்தை நீங்கள் உபயோகப்படுத்தினாலும் உப்பும், புளியும் சேரும் பொழுது அந்த ஜாடி துரு பிடிக்கவும், நீர் விடவும் வாய்ப்பு உள்ளது. எனவே பீங்கான் ஜாடி பயன்படுத்தினால் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும். மீதமிருக்கும் உருண்டைகளை உப்பு எதுவும் சேர்க்காமல் அப்படியே பாலிதீன் பையில் போட்டு வைத்து காற்று புகாமல் இறுக்கமாக ரப்பர் பேண்ட் வைத்து கட்டிக் கொள்ளுங்கள். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் போதும். ஒரு வருடம் வரை அதன் நிறம் மாறவே செய்யாது. வாங்கிய பொழுது எந்த நிறத்தில் இருந்ததோ! அதே நிறத்தில் இருக்கும். அதில் வண்டுகளும், புழுக்களும் பிடிக்காது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

புளியில் இருக்கும் மருத்துவ குணங்கள் வயோதிகம் மற்றும் பார்வைத் திறனை மேம்படுத்தும் ஆற்றல்கள் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக சமையலில் புளியை பயன்படுத்தும் பொழுது சிறிது புளிக்கரைசலில் நீங்கள் சமைக்க இருக்கும் காய்கறி வகைகளை ஊற வைத்து சமைப்பது அந்த காய்கறிகளில் இருக்கும் புரதச்சத்து, கனிம சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும் என்று தேசிய உணவியல் கழகம் அங்கீகரித்துள்ளது. இதைத்தான் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது அதனை பலரும் அலட்சியப்படுத்தி விடுகிறோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதையும் படிக்கலாமே
சப்பாத்தியும், பூரி மாதிரி உப்பி வர, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணினாலே போதும். எந்த மாவில் சப்பாத்தி பிசைந்தாலும் இப்படி பிசைய கத்துக்கோங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -