சப்பாத்தியும், பூரி மாதிரி உப்பி வர, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணினாலே போதும். எந்த மாவில் சப்பாத்தி பிசைந்தாலும் இப்படி பிசைய கத்துக்கோங்க.

chapathi5
- Advertisement -

நிறைய பேருக்கு சப்பாத்தி செய்ய தெரியும். ஆனால், சப்பாத்தி உப்பி வராது. சப்பாத்தி என்றாலே லேயர் லேயராக வர வேண்டும். அதாவது சப்பாத்தி ஊப்பும் போது கீழே ஒரு லேயர், மேலே ஒரு லேயர் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி ஒரு சூப்பர் சப்பாத்தியை உங்கள் வீட்டிலும் உங்கள் கையாலேயும் சுலபமாக செய்து விட முடியும். அது எப்படி என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு அந்த மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், இந்த மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. கடையிலிருந்து வாங்கும் ஆட்டா மாவாக இருந்தாலும் சரி, நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் கோதுமையை மாவாக இருந்தாலும் சரி, அந்த மாவில் இத ட்ரை பண்ணி பாருங்க!

Chapathi maavu

முதலில் 1 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக்கொண்டால், 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தான் சரியான அளவு. ஒரு அகலமான பாத்திரத்தில் 1 – கப் அளவு (100) கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக பிசய வேண்டும். (தண்ணீர் குறைந்தாலும் சப்பாத்தி உப்பி வராது. தண்ணீரை நிறைய உற்றி விட்டாலும் சப்பாத்தியை திரட்ட முடியாது. ஆரம்பத்தில் நீங்கள் பிசையும் போது, கை பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும் பிசைய பிசைய சரியாகிவிடும்.)

- Advertisement -

மாவை நன்றாக பிசைந்து அதன் பின்பு, அந்த மாவின் மேல் பக்கத்தில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி தடவி, ஒரு மனப் பலகையின் மீது வைத்து, உங்களது விரல்களை வைத்து உருட்டி உருட்டி, அழுத்தி 10 நிமிடங்கள் வரை நன்றாக பிசைய வேண்டும். மாவை தொடும்போது சாஃப்டாக இருக்கும் அளவிற்கு வரவேண்டும்.

chapathi1

அதன் பின்பு நேரம் இருந்தால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கலாம். அப்படி இல்லை என்றால், மொத்த மாவையும் நீளவாக்கில் உருட்டி விட்டு, ஒரு கத்தியைக் கொண்டு வெட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதில் சிறிய நீளவாக்கில் இருக்கும் உருண்டைகள் கிடைக்கும்.

- Advertisement -

அதை எடுத்து இரண்டு மடிப்புகள் உள் பக்கம் சுருட்டி, அதன் பின்பு உருண்டை செய்யுங்கள். மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ள,  உருண்டைகளை போல் செய்தால், நான்காக மடித்து தேய்த்து, சப்பாத்தி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நீங்கள் மாவை உருட்டும் போதே இரண்டு லேயர் உங்களுக்கு கிடைத்துவிடும். இப்படி உருட்டிய உருண்டைகளை, சப்பாத்தி பலகையில் மீது வைத்து, லேசாக மாவை தூவி, அழுத்தம் கொடுக்காமல் தான் தேய்க வேண்டும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்தால், சப்பாத்தி உப்பி வராது. ரொம்பவும் மெல்லிசாகவும் தேய்க்க கூடாது. ரொம்பவும் தடிமனாகவும் தேய்க்கக்கூடாது. உப்பி வர சிரமம் இருக்கும்.

- Advertisement -

chapathi1

அதன் பின்பு தோசைக்கல்லை நன்றாக சூடு படுத்தி, சப்பாத்தி கல்லில் போட்டு இரண்டு, மூன்று முறை திருப்பிப் போடும் போதே, சப்பாத்தியில் சிறிய சிறிய முட்டைகள் உருவாகி பெரியதாக உப்ப தொடங்கிவிடும். அதன்பின்பு கரண்டியை வைத்து மேலே லேசாக அழுத்தி சப்பாத்தியை எடுத்து விடுங்கள்.

chapathi6

தேவைப்பட்டால் மேலே நெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறிக் கொள்ளலாம். சூப்பரான சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தி ஆறினாலும் மெத்துன்னு தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் மூலையில் போட்டு வைத்தால் இதெல்லாம் தான் நடக்கும் தெரிந்து கொள்ளுங்கள்! இந்த விளக்கை ஏற்றினால் தான் வருமானம் தடையில்லாமல் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -