ஒரே நாளில் நவகிரக தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபடுவது எப்படி தெரியுமா?

navagragham-1

பல்வேறு தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரகங்களுடைய சன்னதிக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கு. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நவகிரகங்களின் சன்னதி இருப்பதால் அவை அனைத்திற்கும் சென்று வழிபட சில நாட்கள் தேவைப்படுகின்றன. அனால் உங்கள் பயணத்தை எளிமையாக்கும் வகையில் ஒரே நாளில் அனைத்து நவகிரக தலங்களுக்கும் சென்று எப்படி வழிபடுவது என்று பார்ப்போம் வாருங்கள்.

navagaraga

நவகிரகத் தலங்கள் அனைத்திற்கும் மையமாக இருப்பது மயிலாடுதுறை ஆகையால் முந்தைய நாள் இரவே மயிலாடுதுறைக்கு சென்று தங்கிவிடுவது நல்லது. அதோடு அங்கிருந்து அடுத்தநாள் மற்ற கோவில்களுக்கு செல்ல ஒரு காரை பேசிக்கொள்ள வேண்டும். அதிக பட்சமாக 4000 ரூபாய் தான் அதற்கு செலவாகும். அடுத்தநாள் அதிகாலை 5:15 மணிக்கு காரில் கிளம்பிவிட வேண்டும்.

சூரியனார் கோவில்

suriyanமயிலாடுதுறையில் இருந்து சரியாக 25 கி.மீ. தொலைவில் சூரியனார்கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து இந்த கோயிலிற்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகும். சூரியபகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, எருக்கம் மலர்களால் அர்ச்சனை செய்து, கோதுமையால் ஆனா பலகாரங்களை நைவேத்தியம் செய்து பழிப்பட்டால் சூரியனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

கஞ்சனூர் சுக்கிரன் கோவில்

- Advertisement -

sukran

சூரியனார் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சனூர் சுக்கிரன் கோவில். சூரியனார்கோவிலில் ஒருமணி நேரம் இருந்துவிட்டு காலை 7 மணிக்கு கிளம்பினால் 7:15 க்கு சுக்கிரன் கோவிலில் இருக்கலாம். சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

திங்களூர் சந்திரன் கோவில்

sandhiran

சுக்கிரன் கோவிலில் இருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது திங்களூர் சந்திரன் கோவில். சுக்கிரன் கோவிலில் 30 நிமிடங்கள் இருந்துவிட்டு காலை 7:45 மணிக்கு கிளம்பினால் 8:45 க்கு சந்திரன் கோவிலை அடையலாம்.காலை சிற்றுண்டிகாண நேரமும் இதில் அடக்கம். சந்திரனுக்கு சந்தனநிற வஸ்திரம் சாத்தி, வெள்ளை அலரிப்பூக்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரை, அரிசி, பால் ஆகியவை சேர்த்துச் செய்த பாயசத்தை நைவேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு அதை வழங்குவதால் சந்திரனால் ஏற்ப்பட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும்.

ஆலங்குடி குரு பகவான் கோவில்.

guru

சந்திரன் கோவிலில் இருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி குரு பகவான் கோவில். சந்திரன் கோவிலில் 30 நிமிடங்கள் இருந்துவிட்டு காலை 9 :15 மணிக்கு கிளம்பினால் 10:15 க்கு குரு பகவான் கோவிலில் இருக்கலாம். குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாத்தி, மஞ்சள் வண்ண பூக்களால் அர்ச்சனை செய்து, கொண்டைக்கடலை சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால், குரு பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

திருநாகேஸ்வரம் ராகு கோவில்

ragu

குரு பகவான் கோவிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம் ராகு கோவில். குரு பகவான் கோவிலில் ஒருமணி நேரம் இருந்துவிட்டு காலை 11:15 மணிக்கு கிளம்பினால் 11:45 க்கு ராகு கோவிலில் இருக்கலாம். ராகுபகவானுக்கு கருநீல வஸ்திரம் சாத்தி, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து, கறுப்பு உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்பட்டிருக்கும் சர்ப்ப தோஷங்கள் விலகும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.

saneeswaran

ராகு கோவிலில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்.
திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் இருந்து திருநள்ளாறு செல்ல 1 மணி நேரம் ஆகும். ஆனால் அங்கு மாலை 4 மணிக்கு தான் கோயில் நடை திறக்கப்படும். ஆகையால் வழியில் மதிய உணவை அருந்திவிட்டு சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு. 4 மணிக்கு திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலிற்கு செல்லவேண்டும். சனீஸ்வர பகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, கறுப்பு எள்ளினால் செய்யப்பட்ட எள்ளுச் சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால், சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும்.

கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில்.

kedhu

சனீஸ்வரன் கோவிலில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில். சனீஸ்வரன் கோவிலில் அரைமணி நேரம் இருந்துவிட்டு மாலை 4:30 மணிக்கு கிளம்பினால் 05:15 மணிக்கு கேதுபகவான் கோவிலில் இருக்கலாம். கேது பகவானுக்கு பல வண்ணங்களினால் ஆன வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கொள்ளும் வெல்லமும் சேர்த்துச் செய்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கேது பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

திருவெண்காடு புதன் கோவில்.

budhan

கேதுபகவான் கோவிலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெண்காடு புதன் கோவில். கேதுபகவான் கோவிலில் அரைமணி நேரம் இருந்துவிட்டு மாலை 5:45 மணிக்கு கிளம்பினால் 06.00 மணிக்கு புதன் கோவிலில் இருக்கலாம். புதன் பகவானுக்கு பச்சைநிற வஸ்திரம் சாத்தி,
முல்லை அல்லது வெண் காந்தள் மலர்களால் அர்ச்சனை செய்து, பச்சைப்பயறும் வெல்லமும் சேர்த்த பாயசத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் தலம்

sevvai

புதன் கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில். புதன் கோவிலில் 45 நிமிடங்கள் இருந்துவிட்டு மாலை 6:45 மணிக்கு கிளம்பினால் 07:15 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கலாம். செவ்வாய் பகவானுக்கு செந்நிற வஸ்திரம் சாத்தி, செண்பக மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டால் செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

English Overview:

First we should go to Mayiladuthurai and need to stay there a day before night. In Mayiladuthurai we can go to the kumbakonam temples via taxi. So we need to book a taxi. Taxi fare will be around 4000 to 5000 rupees. We should start from Mayiladuthurai at 5:15 AM. From there we need to go to Suriyanar koil. From Mayiladuthurai it will take around 45 minutes to reach Suriyanar koil. We can spend one hour in Suriyanar koil and from there we can start at 7:15 AM.

From Suriyanar koil we can go to kanjanur sukran temple. It is just 5 KM away from Suriyanar koil. In kanjanur sukran temple (koil)  we can spend 30 minutes and from there we can start at 7:45 AM. From kanjanur sukran temple (koil) we can go to thingalur chandran temple (koil). It is 45 KM away from kanjanur sukran temple (koil).

We can reach thingalur chandran temple (koil) by 8:45 AM. This time includes morning breakfast. We can spend 30 minutes in thingalur chandran temple (koil) and from there we can start by 9:15 AM. From thingalur chandran temple (koil) we can go to alangudi guru temple (koil) which is 43 KM away from thingalur chandran temple (koil).

We can reach alangudi guru temple ( koil ) by 10:15 AM. We can spend 1 hour in alangudi guru temple (koil).  From alangudi guru temple ( koil ) we can start at 11:15 AM and go to thirunageswaram rahu temple (koil) which is 20 KM away from alangudi guru temple ( koil ).

We can reach thirunageswaram rahu temple ( koil ) by 11:45 AM. We can spend 1 hr in thirunageswaram rahu temple ( koil) . From thirunageswaram rahu temple (koil) we can start at 12:45 PM and go to thirunallar saneeswaran temple ( koil ). thirunallar saneeswaran temple ( koil ) is 46 KM from thirunageswaram rahu temple ( koil ).

Thirunallar saneeswaran temple ( koil ) will open at 4 PM. So Afternoon we can have lunch and take some rest. By 4 PM we need to reach thirunallar saneeswaran temple ( koil ). We can spend half an hour in thirunallar saneeswaran temple ( koil ). From thirunallar saneeswaran temple ( koil ) we can start at 4.30 PM and go to keezhaperumpallam kethu temple ( koil ) which is 38 KM away from  thirunallar saneeswaran temple ( koil ) .

We can reach keezhaperumpallam kethu temple ( koil ) by 5.15 PM. We can spend 30 minutes in keezhaperumpallam kethu temple ( koil ). From keezhaperumpallam kethu temple ( koil ) we can start at 5.45 PM and go to thiruvenkadu budhan temple ( koil ) which is 8 KM away from keezhaperumpallam kethu temple ( koil ).

We can reach thiruvenkadu budhan temple ( koil ) by 6 PM. We can spend 45 minutes in thiruvenkadu budhan temple ( koil ). From thiruvenkadu budhan temple ( koil ) we can start at 6.45 PM and go to vaitheeswaran koil. We can reach vaitheeswaran koil by 7.15 PM. There we can worship Chevvai bagavan.

This is the best route map to visited kumbakonam navagraha temple. With this route map once visit all the navagraha temples in kumbakonam in a day