கஷ்டப்பட்டு வெள்ளை துணிகளை கையில் தான் துவைக்கிறீர்களா? அப்படின்னா இனிமே இப்படி செஞ்சு பாருங்க மெஷின்லயே சூப்பராக அழுக்குகள் நீங்கிவிடுமே!

cloth-stain
- Advertisement -

துணி துவைப்பது என்பது ஒரு கடினமான காரியம் தான் என்றாலும் இன்று இருக்கும் அவசர உலகில் கையால் துணி துவைப்பது என்பது முடியாத காரியமாக போய்விட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகம் உபயோகமாக இருக்கும் இந்த வாஷிங்மெஷினில் என்னதான் நாம் துணிகளை துவைத்தாலும், சில துணிகளில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகளை நீக்குவது இல்லை. குறிப்பாக வெள்ளை நிறமுள்ள துணிகளில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகளை நீக்கவே செய்யாது. இதனால் வெள்ளை துணிகளை மட்டும் கையில் எடுத்து வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. வாஷிங் மெஷினிலயே எளிதாக எப்படி விடாப்பிடியான கரைகளை வெள்ளை துணியில் இருந்து நீக்குவது? என்கிற குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

white-cloth-vellai

வெள்ளைத் துணிகளை மட்டும் தனியாக எடுத்து வைத்து கையில் துவைத்துக் கொண்டு இருப்பதை விட, நீங்கள் அன்றாடம் மற்ற துணிகளைப் போடும் பொழுது வெள்ளைத் துணிகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவிற்கு நான்கைந்து வெள்ளை துணிகள் சேர்ந்ததும் அதனை மொத்தமாக ஒரு நாள் மெஷினில் போட்டு துவைத்து எடுக்கலாம்.

- Advertisement -

பொதுவாக வெள்ளை துணிகளை துவைப்பதற்கு முன்னர் அரை மணி நேரமாவது வெளியில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி அதில் சோப்பு தூள் அல்லது லிக்விட் உங்கள் வசதிக்கு ஏற்ப ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் மெஷினில் போட்டால் ஓரளவுக்கு அழுக்குகள் நீங்கும். மேலும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வைத்திருப்பவர்கள் சுடு தண்ணீரின் அளவை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். டெம்பரேச்சர் அதிகமானால் துணிகள் பாதிக்கப்படுவது உண்டு. இதனால் சீக்கிரமே துணிமணிகள் கிழிந்து போய்விடும்.

white-cloth-stain

வெள்ளை துணிகளை போடும் பொழுது விடாப்பிடியாக இருக்கும் அழுக்குகளை நீக்க சிலர் பிழிந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்தி வைத்திருப்பார்கள். வெள்ளை துணிகளுக்கு பிழிந்து கொடுக்கும் தன்மையை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைத் துணிகள் அதிகம் இறுக்கத்துடன் பிழியும் பொழுது, கட்டாயம் அழுக்குகள் மட்டுமல்லாமல் துணியும் சீக்கிரமே நைந்து போய்விடும்.

- Advertisement -

நாம் எப்போதும் துணிமணிகளை உட்புறமாக திருப்பிவிட்டு பின்னர் மெஷினில் போடுவது உண்டு. இதனால் காயப் போடும் பொழுது உங்களுக்கு துணியின் நிறம் மாறாமல் இருக்கும். மற்றும் முன்புறத்தில் இருக்கும் வேலைப்பாடுகள் பாதிக்காமல் இருக்கும் அல்லவா? ஆனால் வெள்ளைத் துணிகளை மெஷினுக்குள் போடும் முன்பு அப்படி செய்யக்கூடாது. அழுக்குகள் இருக்கும் பகுதி நேராக இருக்க வேண்டும். நீங்கள் திருப்பி விட்டால் அழுக்குகள் எளிதில் நீங்காது.

white-cloth-stain1

ஏற்கனவே ஊற வைத்த துணிமணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மெஷினுக்குள் போட்டு குறைந்த டெம்பரேச்சரில், குறைந்த பிழியும் தன்மையில் வைத்து லிக்விட் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் பேகிங் சோடா சேர்த்து இயக்கினால் நிச்சயம் எவ்வளவு விடாப்பிடியான கரைகளும் எளிதாக நீங்கிவிடும். பின்னர் அதனை எடுத்து முடிந்தால் ஒரு முறை நல்ல தண்ணீரில் அலசி விட்டு பின்னர் காயப் போடலாம். என்னதான் துவைத்து இருந்தாலும், நீங்கள் மீண்டும் ஒரு முறை அலசிப் பாருங்கள் நுரை நுரையாக வரும். இது நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

- Advertisement -