நவக்கிரகங்களை வலம் வருவது எப்படி?

navagragha

நவகிரகங்களை சுற்றி வருவதில் பலருக்கு பல குழப்பங்கள் உண்டு. சிலர் ஒரு முறை சுற்றுவார்கள் சிலர் மூன்று முறை சிலர் ஒன்பது முறை இப்படி பலரும் பல விதமாக சுற்றுகின்றனர். நவகிரகத்தை முறையாக எத்தனை முறை சுற்றுவது என்பதை இந்த பதிவில் நாம் பாப்போம் வாருங்கள்.

navagragham

நவக்கிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

ஒரு சில காரணங்களால் சிலர் ஒரு முறை மட்டுமே சுற்றினால் போதும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் “ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ” என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு ஒரு முறை வலம் வரலாம்.

இதையும் படிக்கலாமே:
கோடி யாகம் செய்த புண்ணியம் வேண்டுமா? அதற்கான வழிமுறைகள் இதோ.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் மந்திரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have tips for how to worship Navagraha in Tamil. It is called as Navagrahangal valipadu murai in Tamil.