கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது என்ற அறிகுறிகளை எப்படி உணர்வது?

praying-god

கடவுளின் ஆசீர்வாதம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் இருப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு, அந்த கடவுளின் ஆசீர்வாதமானது கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த கலியுகத்தில் எந்த கடவுளும் நேரடியாக வந்து யாரையும் ஆசிர்வாதம் செய்யப்போவது இல்லை. ஆனால் மனித ரூபத்தில் கூட அந்தக் கடவுளானவர் தோன்றி நமக்கு வரும் கஷ்டத்தை தீர்த்து வைத்திருப்பார். அதை சிலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இப்படி தானாகவே அந்த கடவுள் முன்வந்து ஒருவருக்கு நல்ல வழியை காட்டுகின்றார் என்றால் அவர் நிச்சயம் கடவுளின் ஆசியை அதிகமாக பெற்றவராகத்தான் இருக்க முடியும். இப்படி நம் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை வைத்து அந்தக் கடவுளின் ஆசி நமக்கு பரிபூரணமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கும் வாழ்வில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பதை நினைத்துப் பார்த்து, அந்த கடவுள் இதுநாள்வரை உங்களிடம் தான் இருந்திருக்கிறார் என்பதை உணருங்கள்.

nachiyar-koil

எல்லோரும் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக தான் வைத்திருப்போம். ஆனால் சில சமயங்களில் கோவிலுக்கு செல்லும் போது நம்மை அறியாமலேயே ஒரு இனம் புரியாத சந்தோஷமானது நம் மனதிற்குள் வந்துவிடும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகரோ, பூசாரியோ நாம் கேட்காமலேயே அந்த சுவாமியின் பிரசாதத்தை நம் கைகளில் கொண்டுவந்து கொடுப்பார். அந்த பிரசாதத்தை கையில் வாங்கிக்கொண்டு அந்த இறைவனை நோக்கி இரண்டு கைகளையும் எடுத்து கும்பிடும் போது நம்மை அறியாமலேயே நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். எல்லா கஷ்டமும் தீர்ந்து விட்டது போன்ற மன நிம்மதியும் அடைவோம். அந்த தருணத்தில் நாம் எதிர்பார்க்காத ஒரு மகிழ்ச்சியான செய்தி நம்மை வந்து சேரும். இந்த அறிகுறியானது நம்மை கடவுள் ஆசிர்வாதம் செய்து உள்ளார் என்பதை தான் குறிக்கின்றது.

நம் வீட்டில் தீர்க்கவே முடியாத பிரச்சனையை தீர்ப்பதற்கு வேண்டிக்கொள்ள நாம் கோவிலுக்கு செல்வோம். எதிர்பாராமல் கோயிலில் சந்திக்கும் ஒருவரிடம் பிரச்சினையை கூற, அவர் நமக்காக ஒரு ஆலோசனையை கூறியிருப்பார். அந்த ஆலோசனை ஏதாவது ஒரு சுலபமான பரிகாரமாக கூட இருக்கலாம். அந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு அந்த இறைவனுக்கு நாம் செய்து வருவோம். இப்படி தொடர்ந்து அதை செய்து வரும்போது தீர்க்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்த பிரச்சனையானது ஒருகட்டத்தில் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையானது நிறைய பேரின் வாழ்க்கையில் அனுபரீதியாக நடந்து இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் உங்களுக்கு பரிகாரம் சொன்ன அந்த நபர் அந்த இறைவனின் ரூபம் தான். அந்த இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு அந்த இடத்தில் கிடைத்திருக்கின்றது என்றுதான் அர்த்தம்.

praying god

இந்த இடத்தில் பரிகாரம் என்பது கடவுளுக்கு செய்வது மட்டுமல்ல. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற வருத்தத்தில் இருந்திருப்பீர்கள். அல்லது உங்கள் குழந்தைக்கு தீர்க்கமுடியாத நோய் ஏதாவது இருந்திருக்கும். முகம் தெரியாத மனிதர் ஒருவர் சொல்லி இருப்பார். இந்த மருத்துவமனைக்கு சென்றால் இந்த பிரச்சனை பரிபூரணமாக தீர்ந்துவிடும் என்று. அந்த இடத்திற்கு சென்று நாம் சிகிச்சை எடுத்து நல்ல பயனும் அடைந்திருப்போம். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன அந்த முகம் தெரியாத மனிதன் கடவுள்.

- Advertisement -

நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே மனித ரூபத்தில் வந்து அந்த இறைவன் கூறியிருப்பார். ஏதாவது ஒரு வேலையை நாம் செய்து முடித்து விடவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்போம். அந்த குறிப்பிட்ட வேலையை  செய்தால் நமக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்து வைத்து இருந்திருப்போம். உதாரணமாக ஒரு நிலம் வாங்க எல்லா முயற்சியையும் நாம்  மேற்கொண்டிருப்போம், நம் மனதிற்கு பிடித்தமான ஒரு இடத்தையும் நாம் தேடி கண்டுபிடித்து விடுவோம். நிலத்தை விற்பவரும் நமக்கு கொடுப்பதற்கு தயாராக தான் இருப்பார். நிலத்தை பதிவு செய்து நம் பெயருக்கு மாற்ற வேண்டும். அவ்வளவு தான். மற்ற வேலைகளை எல்லாம் நாம் முடித்து வைத்திருப்போம். ஆனால் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சினையின் மூலம் அந்த இடத்தை நம்மால் வாங்க முடியாமல் போயிருக்கும். யாரோ ஒருவர் மூலமாக அந்த இடமானது நம் கையை விட்டு பரி போயிருக்கும். இந்த சமயத்தில் நம் மனவருத்தத்தை நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாது. ஆனால் சில நாட்கள் கழித்து பார்த்தால் அந்த இடத்தை வேறு ஒருவர் வாங்கி பெரிய வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார். நல்லவேளை இந்த இடத்தை நான் வாங்கவில்லை என்று பெருமூச்சு விடுவீர்கள். அந்த சமயம் உங்களை கடவுள் காப்பாற்றி இருக்கின்றார் என்பதுதான் அர்த்தம்.

praying god 4

சில சமயம் நம் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது முதலில் ஒரு பேருந்து வரும். கூட்டமாக இருக்கிறது இதில் செல்ல வேண்டாம் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று அருகில் இருப்பவர் கூறுவார். நாமும் சரி என்று இதை விட்டு விட்டு அடுத்த பேருந்தில் செல்வோம். அதன்பிறகு பார்த்தால் முதலில் வந்த பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்கும். நல்ல நேரம் அந்த பேருந்தில் நான் சென்றிருந்தால் என் உயிருக்கு ஆபத்தாகி இருந்திருக்கும் என்று நினைத்தவர்கள் எத்தனை பேர். சில நேரங்களில் நம் உயிரை கூட நம் நல்ல நேரமானது காப்பாற்றும். இதுவும் கடவுளின் செயல் தான்.

இப்படி எதிர்பாராமல் நடக்கும் பலவிதமான செயல்பாடுகளில் நமக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து நாம் தப்பித்து வருகின்றோம் என்றால் அது தானாக நடப்பது இல்லை. அந்த இறைவனின் ஆசீர்வாதம் இருப்பதால்தான் நமக்கு ஏற்பட இருந்த துன்பங்களிலிருந்து எல்லாம் தப்பித்துக் கொண்டு வருகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தவிர இறைவன் நேரடியாக தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

இதையும் படிக்கலாமே
லக்ஷ்மி தேவிக்கு இணையான கோமதி சக்கரம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadavul aasirvatham in Tamil. Gods blessing in Tamil. Feeling of gods bless in Tamil. Kadavulai unarvathu in Tamil.