வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மியை இப்படித்தான் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

Mahalakshmi_1

நம் எல்லோரது வீட்டிலும் வெள்ளிக்கிழமை என்றால் பொதுவாகவே மங்களகரமான நாளாக தான் இருக்கும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி, சூலம் ஏற்றி இறைவனை வழிபட்டால் தான் வெள்ளிக்கிழமை என்ற அந்த நாளிற்க்கே ஒரு சிறப்பு. வெள்ளிக்கிழமை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது அந்த மகாலட்சுமியின் முகம் தான். வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் மகாலட்சுமியின் அம்சமாகத் தான் கருதப்படுகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பெண்கள் இந்த வழிபாட்டோடு சேர்த்து, வெள்ளிக்கிழமையை இன்னும் சிறப்பான வெள்ளிக்கிழமையாக மாற்ற என்ன செய்யலாம்? என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

மகாலட்சுமிக்கு பிடித்தமான ஒரு பொருள் என்றால், அதில் மருதாணியும் நிச்சயமாக அடங்கும். மருதாணி செடியில் இருக்கும் விதைகளை எடுத்து, சிறிய கண்ணாடி பௌலில் நிரப்பி, சிறிது மஞ்சள் குங்குமத்தோடு கலந்து, நம் வீட்டின் வாசலில், அதாவது நில வாசற்படிக்கு அருகில், வைத்து விட்டால் போதும். வியாழக்கிழமை அன்று மருதாணி விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இப்படி வைப்பது நல்ல பலனைத் தரும். பார்ப்பதற்கு இது ஒரு சின்ன பரிகாரம் போலத்தான் தெரியும். ஆனால் இதன் மூலம் மகாலட்சுமியின் மனமானது மிகவும் சந்தோஷப்படும். நம் வீட்டிற்குள் நுழையும் மகாலட்சுமி கட்டாயமாக சந்தோஷமாக நுழைவாள் என்பது உண்மையான ஒன்று. முடிந்தவரை மருதாணி செடியில் இருந்து விதைகளை பரித்து, வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்யலாம். முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மருதாணி விதைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதோடு சேர்த்து வீட்டை இன்னும் மங்களகரமாக மாற்ற, ஒரு செம்பு கலசமோ அல்லது பித்தளை கலசமோ(சொம்பு) எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முழுவதும் பச்சரிசியை நிரப்பிக் கொள்ளவும். இரண்டு விரலி மஞ்சளில், குங்குமம் வைத்து, பச்சரிசியின் மேல் வைத்து விடவும். ஒரு தாம்பூலத் தட்டில் மேல் வெற்றிலையை வைத்து கொள்ள வேண்டும். அதன்பின்பு அலங்கரிக்கப்பட்ட இந்த கலசத்தை வெற்றிலையின் மேல் வைத்து, மகாலட்சுமிக்கு சமர்ப்பித்தால் மகாலட்சுமி பூஜை முழுமையாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

Kalasam

அதாவது, தாம்பூலத் தட்டின் மேல் வெற்றிலை, வெற்றிலையின் மேல் அலங்கரிக்கப்பட்ட கலசம். இதை உங்களால் வாசனை உள்ள பூக்களால் எவ்வளவு, அலங்கரிக்க முடியுமோ, அவ்வளவு அலங்கரித்து கொள்ளலாம். இந்த வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட கலசம், அடுத்த வியாழக்கிழமை வரை அப்படியே இருக்கலாம். வியாழக்கிழமை சுத்தம் செய்யும்போது அரிசி, மஞ்சள், பூ வெற்றிலை இவைகளை புதியதாக மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து இப்படி செய்து வருவது நல்ல பலனைத் தரும். முடியாதவர்கள் தொடர்ந்து 5 வாரங்களாவது மகாலட்சுமியை இப்படி பூஜிப்பது வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டுவதற்கு ஒரு நல்ல வழியாக இருக்கும். மாற்றிய பச்சரிசி மஞ்சள் இவைகளை வீட்டில் சமையலுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம். மகாலட்சுமியின் மனம் குளிரும் போது நம் வீட்டிற்கு எந்த குறையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
உங்களது வேண்டுதல் இறைவனின் செவிகளுக்கு கேட்க வேண்டுமா? எருக்கன் இலை சூடம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Friday laxmi pooja vidhi. Mahalakshmi valipadu in Tamil. Mahalakshmi kadatcham Tamil. Friday pooja at home in Tamil. Mahalakshmi arul pera.