அயல் நாட்டவர் போல சண்டை போட்டு வாழும் கணவன் மனைவி இருவரும் அண்டை நாட்டவர் போல இணக்கமாக வாழ அருமையான எளிய தீப பரிகாரம்.

fight vinayagar dheepam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் உலக பிரச்சனைகளை கூட பேசி தீர்த்து விடலாம் ஆனால் வீட்டிற்குள் கணவன் மனைவிக்குள் தினம் தினம் நடக்கும் சண்டை சச்சரவைகளை ஒரு முடிவுக்கே கொண்டு வர முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் கருத்து வேறுபாடுகளும் விட்டுக் கொடுக்காத தன்மையும் மேலோங்கி பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியான பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஒரு எளிமையான பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருப்பின் அதை இருவரும் அமர்ந்து பேசி சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நமக்குள்ளே செய்ய வேண்டிய மாற்றங்களை செய்து கொண்ட பின்னும் எந்த பலனும் இல்லை எனும் பட்சத்தில் இந்த பரிகார முறைகளை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரங்களை இரண்டு வகையாக செய்ய வேண்டும். கணவன் ஒருவகையாகவும் மனைவி இன்னொரு வகையாகவும் செய்ய வேண்டும். அதாவது கணவன் மனைவி இருவருக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய மனைவி அரச மரத்தடியில் இரண்டு அகல் தீபங்களை ஏற்றி வர வேண்டும். இதை தொடர்ந்தும் ஏற்றலாம் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களிலும் ஏற்றலாம். அதே போல கணவன் மனைவி தன்னுடன் அன்னோன்யமாக இருக்க வேண்டும் என நினைக்கும் போது வேப்ப மரத்தடியில் விளக்கு ஏற்ற வேண்டும்.

பொதுவாக வேப்ப மரத்தை பெண் தெய்வமாகவும், அரச மரத்தை ஆண் தெய்வமாகவும் நினைத்து வழிபடுவது நம்முடைய வழக்கம். அதை தான் இப்பொழுது ஆண் மனைவி தன்னுடன் இணக்கமாக இருக்க பெண் தெய்வத்தையும், பெண் தன்னுடன் இணக்கமாக இருக்க ஆண் தெய்வத்தையும் மாற்றி வழிபடும் முறை தான் இந்த தீபம் முறை. இதிலே இன்னொரு எளிய தாந்திரீக பரிகாரமும் உண்டு அதையும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய வேப்பங்குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவுள்ள அரச குச்சி ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு குச்சியின் மீதும் தேனை நன்றாக பூசி ஒரு மஞ்சள் நிற கையிறை கட்டிய பிறகு விநாயகர் ஆலயத்தில் சென்று அவருடைய பாதத்தில் இந்த அரச குச்சி, வேப்ப குச்சியையும் வைத்து தங்கள் குடும்ப ஒற்றுமை மேம்பட வேண்டும் என்று கணவனும் மனைவியும் வேண்டிக் கொள்ள வேண்டும். இதை தனித்தனியாக பிரிந்து வாழ்பவர்கள் கூட செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: முருகனின் தீவிர பக்தரா நீங்கள்? உங்கள் வேண்டுதலை முருகனிடம் வைப்பதற்கு முன்பாக எந்த முருகனிடம் என்ன வேண்டுதலை வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு பிறகு வேண்டுதல் வையுங்கள். உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக முறையில் நிறைவேறும்.

இந்த பரிகார முறையை ஒருவர் தொடங்கிய நாளிலிருந்து 15 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் அல்லது இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் இதை செய்ய வேண்டுமே தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது பலன் அளிக்காது. கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட இந்த பரிகார முறைகளில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்து ஒற்றுமையுடன் நல்லதொரு அழகான வாழ்க்கையை வாழுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -