- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க பரிகாரம்

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். முதல் பாகத்தில் தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என்று வாழும் ஒரு நபர் அடுத்த பாதையில் கணவன் மனைவி குழந்தைகள் என்று வாழ ஆரம்பித்து விடுவார்கள். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்றாகவே திகழ்கிறது. அப்படி வாழக்கூடிய பலரும் முதல் பாதியில் மகிழ்ச்சியாகவும் அடுத்த பாதையில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

அதற்கு முக்கியமான காரணம் தங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை தங்களை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவது என்பதுதான். அப்படி சண்டை ஏற்பட்டு அதனால் பிரிவுகளோ மன வருத்தங்களோ உண்டாகி இருக்கிறது என்னும் பட்சத்தில் இந்த முறையில் விரலி மஞ்சளை வைத்து பரிகாரம் செய்ய அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய அனைத்து விதமான கசப்புகளும் நீங்கி இனிமையான வாழ்க்கையை பெற முடியும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க பரிகாரம்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை இனிமையான வாழ்க்கையாக அமையும். அதை விடுத்து விட்டு நீ பெரியவனா நான் பெரியவளா? நீ கூறுவதை நான் எப்படி கேட்பது? உன்னிடம் எதையும் சொல்ல தயாராக இல்லை என்று தன்னிலையுடன் செயல்பட்டாலோ அல்லது பிறர் கூறுவதை கேட்டு தவறான ஒரு முடிவுக்கு வந்து அதனால் சண்டையிட்டாலோ, பணம் தொடர்பான பிரச்சனைகளால் சண்டைகள் வந்தாலோ அவர்களுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. அந்த நிம்மதியற்ற வாழ்க்கையை மாற்றி நிம்மதியான வாழ்க்கையாக மாறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது ஒன்றே ஒன்றுதான் அதுதான் விரலி மஞ்சள். ஒரு வெள்ளை நூலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நூலில் மஞ்சளை நன்றாக தடவி காய வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த நூல் மஞ்சள் நூலாக மாறி இருக்கும். அந்த மஞ்சள் நூலில் காம்பு உடையாத ஏழு முழு விரலி மஞ்சளை எடுத்து மாலையாக பூ கட்டுவது போல் கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கட்டிய இந்த மஞ்சளை உங்களுடைய வலது கையில் வைத்து இடது கையை வைத்து மூடிக்கொண்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்னும் மந்திரத்தை முழு மனதுடன் தங்களால் இயன்ற அளவு கூறலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். அது உங்களுடைய விருப்பத்தை பொறுத்து. இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலையில் விளக்கேற்றி வைத்துவிட்டு செய்வது என்பது சிறப்பு.

இப்படி தினமும் நாம் இந்த மந்திரத்தை கூற வேண்டும். முதல் நாள் கூறி முடித்த பிறகு அந்த விரலி மஞ்சள் மாலையை எடுத்து பூஜையறியிலேயே வைத்து விடுங்கள். மறுபடியும் மறுநாள் அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு இதே மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து கொண்டு வரும்பொழுது கணவன் மனைவிக்கிடையே எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை படிப்படியாக நீங்குவதோடு ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள். பிரிந்து சென்ற கணவன் மனைவி கூட இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது விரும்பி வந்து சேருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடன் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த விரலி மஞ்சள் பரிகாரத்தை முழுமனதுடனும் நம்பிக்கையுடனும் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் வாழ்க்கை துணை அவர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்