கணவன் வசிய மந்திரம்

Sivan-manthiram

“சிவ சக்தியின்” அம்சமான ஆணும்- பெண்ணும் திருமண பந்தத்தில் ஒன்றாக இணைந்து வாழ்வதே இயற்கை மற்றும் அந்த இறைவனின் நியதி என நமது வேதங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த திருமண வாழ்வில் பலர் மகிழ்வாக இருந்தாலும், ஒரு சில தம்பதிகள் சில விடயங்களால் மனவருத்தங்கள் ஏற்பட்டு நிம்மதியின்றி வாழ்கின்றனர். அதிலும் கணவரின் அன்பை பெறாமல் வாழும் மனைவிகள் மிகவும் துன்புறுகின்றனர். அப்படிப்பட்ட பெண்கள் மீண்டும் கணவரின் அன்பை பெறுவதற்கும், அவருடன் இணக்கமாக வாழ்வதற்கான “புருஷ வசிய மந்திரம்” இது.

munivar

கணவன் வசிய மந்திரம்

ஓம் ஐம் நம

குறிப்பு: சித்தர்கள் உருவாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த இம்மந்திரத்தை, ஈர்ப்பில்லாமல் அல்லது பிரிந்திருக்கும் தங்களின் கணவரின் மீது மட்டுமே பிரயோகிக்குமாறு பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மிகவும் ஆற்றல் மிக்க இம்மந்திரத்தை பெண்கள் விடியற்காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு பிரம்மமுகூர்த்த நேரமான காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக தங்களின் இஷ்ட தெய்வத்தையும், தங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு சித்தரையோ வணங்கி இந்த மந்திரத்தை, உங்கள் கணவரின் முகத்தை மனதில் நினைத்தவாறு 48 நாட்கள் தினமும் 108 முறை அல்லது 1008 முறை உச்சாடனம் செய்து வர, உங்கள் மீது ஈர்ப்பில்லாமல் இருக்கும் கணவரோ அல்லது உங்களை பிரிந்து சென்ற கணவரோ மீண்டும் உங்களிடம் திரும்பி அன்னோன்யமாக இருப்பார்.

munivar

பிரபஞ்சம் முழுவதும் ஒரு பிரணவ மந்திர அதிர்வு நிறைந்திருப்பதை கண்டறிந்த சித்தர்கள், தங்களது அறிவை கொண்டு சக்திவாய்ந்த அதிர்வுகளை ஏற்படுத்தும் மந்திரங்களை கண்டறிந்தனர். அதில் ஒன்று தான் இந்த கணவன் வசிய மந்திரம். கணவனின் மனம் பெண்கள் வசம் வரும் வரை இந்த மந்திரத்தை தொடர்ந்த ஜபித்து வருவதே சால சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
அனைத்து சாபங்களையும் நீக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்

English Overview:
Here we have Husband vasiya mantra in Tamil. This mantra needs to be chanted by women who needs their husband love. Daily This mantra needs to be chanted 108 times. This mantra is also called as Kanavan vasiyam manthiram in Tamil or Purusha vasiyam in Tamil.