அனைத்து சாபங்களையும் நீக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்

sivan
- Advertisement -

உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்குமே இந்த பூமியில் வாழ சமஉரிமை உண்டு. அதே நேரத்தில் ஒரு உயிர் இறப்பதால் தான் மற்றொரு உயிர் வாழ முடிகிறது என்பதும் உண்மையாகும். அந்த வகையில் மனிதர்களாகிய நாம் நமது வாழ்க்கைக்கான தேவையின் போது நம்மை அறியாமல் நமது சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு செய்து விடுகிறோம். அதன் காரணமாக அந்த பிற உயிர்களின் மனவருத்தத்தால் நமக்கு சாபம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சாபங்களை நீக்கும் “சிவனுக்குரிய” மந்திரம் தான் இது.

chitra pournami sivan

பிரதோஷ மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

- Advertisement -

இம்மந்திரத்தை மாதத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட, பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு நீங்கள் உங்களை அறியாமல் செய்த தீங்கினால் அவர்களால் உங்களுக்கு மனதளவில் கொடுக்கப்பட்ட சாபங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்

- Advertisement -

வேண்டியவர்களுக்கெல்லாம் அவர்கள் விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் தன்மை கொண்டவர் “ஈசனாகிய” “சிவ பெருமான்”. பொதுவாக சிவபெருமானை வழிபடுவதற்கு எல்லா நாட்களும் சிறந்த நாட்கள் என்றாலும், அந்த சிவ பெருமானுக்கே உரிய “பிரதோஷம்” தினத்தன்று சிவனையும், அவரின் வாகனமான “நந்தி” தேவரையும் வணங்குவது பல நன்மைகளை அளிக்கும். பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்கி தவிக்கும் மனிதர்களின் “பிறவி தோஷத்தை” நீக்கும் நாளாகியதால் இது “பிரதோஷம்| என்று அழைக்கப்படுகிறது.

Sivan Manthiram

பிரதோஷ நேரம் என்பது பொதுவாக மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை என்று கூறப்படுகிறது. இந்த காலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மயக்க நிலையில் இருக்கும். ஏனெனில் இந்த பிரதோஷ நேரத்தில் தான் உலகை காக்க சிவ பெருமான் “ஆலகால விடத்தை” அருந்தியதாக ஐதீகம். எனவே இக்காலத்தில் சிவ பெருமானின் வாகனமான “நந்தி” தேவருக்கு அருகம்புல், பூக்கள் மற்றும் சந்தனம் சாற்றி பூஜை செய்து அவரிடம் நமது கோரிக்கையை வேண்டிக்கொண்டால், நமது விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் அந்த கருணாமூர்த்தியான ஈசன்.

English Overview:
Here we have Prathosam mantra in Tamil. By chanting this mantra one can get away from all the sins which he had done. This mantra is also called as Prathosam manthiram in Tamil.

- Advertisement -