சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு இந்த விளக்கு ஏற்றினால் போதுமா?

vilakku-nagar-silai
- Advertisement -

சிலரது வீடுகளில் சதா கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்று இருக்கும். அந்த சண்டைகள் நாளடைவில் விரிசலாக மாறக்கூடும். அப்படி விரிசல் விடாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ கருத்து வேறுபாடுகள் நீங்க தெய்வத்தின் துணையை நாடுவதில் தவறில்லை. இன்னார்க்கு இன்னாரென்று ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டது. நீங்கள் எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் அது மாறப் போவதில்லை. இப்போது இருக்கும் பலரும் சிறுசிறு சண்டைகளுக்கு கூட பிரிவு என்கிற பெரிய வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.

marraige-couple

சண்டையா? உடனே ஒத்து வராது பிரிந்து விடலாம். விவாகரத்து செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுகின்றனர். நம்முடைய தாய் தந்தையர்கள் எல்லாம் இப்படி நினைத்து இருந்தால் நம்முடைய நிலைமை என்ன ஆயிருக்கும்? என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

- Advertisement -

எந்த விஷயத்திற்கும் தீர்வு இல்லாமல் நிச்சயம் இருக்கப் போவதில்லை. அதற்கு இறைவனின் துணை உங்களுக்கு வேண்டும். யாரிடமும் எந்த யோசனையும் கேட்காதீர்கள். உங்களைப் படைத்த இறைவனை முழுமையாக நம்புங்கள். கணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைக்க சில கடவுள்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவ்வகையில் எந்த கடவுளை வணங்கினால் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்? என்பதைத் தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

fight2

ஏற்கனவே பிரிந்த தம்பதியர்கள் கோவில்களில் ஸ்தல மரங்களுக்கு கீழே வீற்றிருக்கும் நாகர் சிலைக்கு வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்கள் சாற்றி, மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு கணவன் மனைவி பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி வழிபடுவதால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். மீண்டும் வாழ்வில் இணைந்து கடைசி வரை ஒன்றாக அன்னோன்யமாக பயணம் செய்வார்கள்.

- Advertisement -

அது போல் வெள்ளிக்கிழமை அன்று நவகிரக சன்னிதிக்கு சென்று அதில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஒரு அகல் விளக்கில் சிறிது கற்கண்டு போட்டு அதில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும். சுக்கிர பகவானுக்கு அகல் விளக்கில் கல்கண்டு தீபம் ஏற்றுவது கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும். வீட்டிலேயே சாதாரணமாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருப்பவர்கள் கூட இது போல் செய்து வந்தால் ஒற்றுமையாக மாறி விடுவார்கள்.

navagragam

கணவன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தால் சிவாலயங்களில் இருக்கும் நந்தி பகவானுக்கு திங்கள் கிழமை அன்று காலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இரண்டு ஜோடியான அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். அமைதி பிறக்கும் என்பது ஐதீகம். இது கணவன் மனைவிக்கும் பொருந்தும் மற்ற உறவுகளுக்கும் பொருந்தும்.

- Advertisement -

neideepam

அது போல் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு கோர்ட்டு கேஸ் வரை சென்று இருந்தால் மீண்டும் ஒன்று சேர்வதற்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் 12 முறை வலம் வந்து 48 நாட்கள் நெய் தீபம் ஏற்றி வர தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். ஒவ்வொரு கடவுளருக்கும் நெய் தீபம் ஏற்றுவதால் நிறைய நன்மைகள் உண்டாகின்றன. மற்ற எண்ணெய்களை காட்டிலும் நெய் தீபம் ஏற்றுவது 100 பரிகாரம் செய்வதற்கு சமமாகும். சுத்தமான நெய்யாக பார்த்து வாங்கி வைத்துக் கொண்டால் இது போன்ற பரிகாரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
நாக தோஷத்தால் திருமண தடை, வீட்டில் சுப காரிய தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதா? நாகதோஷத்தை படிப்படியாக குறைக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -