நாக தோஷத்தால் திருமண தடை, வீட்டில் சுப காரிய தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதா? நாகதோஷத்தை படிப்படியாக குறைக்கூடிய சக்தி இந்த பரிகாரத்துக்கு உண்டு.

sarpam-nagam

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் நாக தோஷம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டிருக்கும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தைப் பேறு இன்மை, வீட்டில் தேவையற்ற குழப்பங்கள் இப்படியாக பல பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். இவர்களுக்கு சுலபமான முறையில் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், என்ன பரிகாரத்தை செய்வது? எப்படி செய்வது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த தோஷம் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் எதனால் வருகின்றது என்பதையும் தெரிந்து கொண்டு, பரிகாரத்திற்கு செல்வோமா?

nagaraja

நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு தோஷமாக இருந்தாலும், அது நம் கர்ம வினையின் பயனால் உண்டாக்கப்பட்டது என்று சொல்லுவார்கள். நாம் செய்த கர்ம வினையோடு சேர்த்து, நம் முன்னோர்கள் அறிந்து அறியாமல் செய்த பாவத்திற்கான தண்டனையையும், அடுத்த சந்ததியினருக்கள் அனுபவிக்க நேரிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘நாம் பாவம் செய்யக்கூடாது. அந்த பாவம் நம் பிள்ளைகளை போய்ச்சேரும் என்று சொல்லுவார்கள் அல்லவா?’ இதே போல்தான் நம்முடைய முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்து சாகடித்திருந்தாலோ, அதை துன்புறுத்திருந்தாலோ அதற்கான தோஷங்கள் கூட அடுத்த சந்ததியினரை பாதிக்கலாம்.

சரி, இப்போது உங்களுடைய ஜாதக கட்டத்தில் இந்த நாக தோஷம் இருப்பதன் மூலமாக தொடர் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தால் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். அதாவது, கோவில்களில் அரசமரத்தடியில் பிள்ளையாருக்கு பக்கத்தில் நாகர் சிலைகள் இருக்கும். இந்த நாகர் சிலைகளுக்கு சில கோவில்களில் நாமே அபிஷேகம் செய்து, பூஜை செய்யக் கூடிய அனுமதியையும் வழங்குவார்கள்.

nagaraja

குறிப்பாக கோவிலுக்கு வெளியில் மரத்தடியில் இருக்கக்கூடிய நாகர் சிலைகளுக்கு நம் கையாலேயே அபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், உங்கள் கையாலேயே அந்த நாகர் சிலைகளுக்கு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அபிஷேகம் செய்து விட்டு, முடிந்தால் பசும்பால் அபிஷேகம் செய்யலாம். பசும்பால் கிடைக்காதவர்கள் இளநீர் அபிஷேகம் செய்து அதன் பின்பாக நாகர் சிலைகளுக்கு, முழுமையாக மஞ்சள் தடவி, குங்குமம் பொட்டு வைத்து வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு வெற்றிலை பாக்கு பூ பழத்தை சிலைக்கு முன்பு வைத்துவிட்டு, வாசனை மிகுந்த தூபம் ஏற்றி வைத்துவிட்டு, முடிந்தால் கற்பூர ஆரத்தி காட்டி விட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் முழுமையாக நீக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தினை எப்போது செய்வது?

vetrilai

செவ்வாய்க் கிழமைகளில் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். நிறைந்த பௌர்ணமி அன்று தொடர்ந்து ஐந்து பவுர்ணமி தினம் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வரும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் படிப்படியாக குறையும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது மட்டும் உறுதி.

இதெல்லாம் செஞ்சா திருமணம் நடந்து விடுமாமா? இதெல்லாம் செஞ்சா குழந்தை பிறந்து விடுமா? என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை செய்யாமல், அந்த நாகராஜனை நினைத்து நீங்கள், உங்கள் கைகளால், நம்பிக்கையோடு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்.

ilaneer

கோவிலுக்கு சென்று சிலைக்கு இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால், இப்போதெல்லாம் மிக சிறிய அளவில் உலோகத்தால் செய்யப்பட்ட பூஜைக்குரிய நாக சிலைகள் கடைகளில் கிடைக்கின்றது. அந்த சிலைகளை வாங்கி வீட்டில் வைத்தும், மேலே சொல்லப்பட்டுள்ள முறைப்படி, பூஜை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க இதைப் பயன்படுத்தினால் மிகவும் நல்லதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.