மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனி நான் பேசப்போவதில்லை. நான் வீசும் பந்துகள் பேசும் – இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்

Team

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என மிக நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வு எடுத்து வருகின்றனர்.

Ashok

உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரேயான சில போட்டிகளிலும், நியூசிலாந்து தொடரிலும் இந்திய அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளார். மேலும் இந்த தொடர் குறித்து பும்ரா கூறுகையில் : கடந்த சில மாதங்களாக நான் ஓய்வுடன் சிறிது பயிற்சியினையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் தற்போது சீராக உள்ளதாக கருதுகிறேன். மேலும், தற்போது உன்னை சுற்றி ஒரு நல்ல சூழல் உள்ளது இது எனது பந்துவீச்சை மேலும் மெருகேற்ற உதவும்.

bumrah

வரும் ஆஸ்திரேலிய தொடரில் எனது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்கு நான் அளிக்கும் பதில் என்னுடைய பந்துகளே. நான் வீசப்போகும் ஒவ்வொரு சிறப்பான பந்தும் என்னை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலாக அமையும் என்று பும்ரா கூறினார். பும்ரா தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

இதையும் படிக்கலாமே :

என்னது கோலி 4ஆம் இடத்தில் களமிறங்குவதா ? முட்டாள் தனம் செய்ய வேண்டாம் ரவி சாஸ்திரி. கோலி 3ஆம் இடத்திலே களமிறங்கட்டும். 4ஆம் இடத்தில் இவர் ஆடட்டும் – கங்குலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்