என்னது கோலி 4ஆம் இடத்தில் களமிறங்குவதா ? முட்டாள் தனம் செய்ய வேண்டாம் ரவி சாஸ்திரி. கோலி 3ஆம் இடத்திலே களமிறங்கட்டும். 4ஆம் இடத்தில் இவர் ஆடட்டும் – கங்குலி

Ganguly
- Advertisement -

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் மே மாதம் இறுதியில் துவங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

virat

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இங்கிலாந்து மைதான சூழலுக்கு தகுந்தவாறு 3ஆம் இடத்தில் களமிறங்காமல் 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என்று இந்திய அணியின் பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி கங்குலி கூறியதாவது : கோலி 4ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக செய்தித்தாளில் படித்தேன். இந்த முடிவு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், தற்போது உள்ள இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளனர். உலகின் பல்வேறு இடங்களில் இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி உள்ளது.

ms

எனவே, ரோஹித் மற்றும் தவானை தொடர்ந்து கோலி ஆடுவதே சிறந்தது. கோலியின் ஆரம்ப காலத்தில் இருந்து ஆடிவந்த இடம் 3. எனவே, அவரை மாற்றி இறக்கினால் அது பெரிய பிரச்சனையாக முடியும். தோனியை வேண்டுமென்றால் 4ஆம் இடத்தில் இறக்கலாம். தோனி எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்றாற்போல் விளையாடும் தன்மை உடையவர் என்று கங்குலி கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனியின் பேட்டிங் பார்ம் கடந்த ஆண்டு மோசமாக இருந்தது. ஆனால், அவர் மீது நம்பிக்கை வைத்து கோலி என்னிடம் பேசியவை இதுதான் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -