உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. இதனை செய்யுங்கள். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியை நேரில் இலவசமாக பார்க்க ஓர் அறிய வாய்ப்பு – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

Worldcup

2019ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட தயாராகி விட்டன. இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறிவருகின்றனர்.

Ground

இந்த உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை கிடைக்க ஐ.சி.சி. ஒரு அறிய இலவச வாய்ப்பினை அறிவித்துள்ளது.

அதன்படி ஐ.சி.சி வெளியிட்ட பதிவில் நீங்கள் எந்த நாட்டில் எதுபோன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என்று புகைப்படம் எடுத்து ஐ .சி.சி யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உங்களது நாட்டின் பெயரை சேர்த்து அந்த புகைப்படத்தையும் பதிவிடுங்கள். அதில் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படம் பதிவிட்ட நபர்களுக்கு உலகக்கோப்பை போட்டியினை நேரில் காண இலவச டிக்கெட் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளது. இதோ அந்த பதிவு :

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவச டிக்கெட்டினை பெற்று உலகக்கோப்பை போட்டியினை நேரில் கண்டு ரசியுங்கள். வாய்ப்பினை தவறவிட வேண்டாம் நண்பர்களே. முடிந்தவரை இந்த தகவலை பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே :

நாளைய ஆஸி போட்டிக்காக கடும் வெயிலும் வியர்க்க வியர்க்க பயிற்சியினை மேற்கொண்ட தோனி மற்றும் கோலி – பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்