நாளைய ஆஸி போட்டிக்காக கடும் வெயிலும் வியர்க்க வியர்க்க பயிற்சியினை மேற்கொண்ட தோனி மற்றும் கோலி – பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு

Dhoni

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் நாளைக்கு 24ஆம் தேதி (24-02-2019) இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Stonis

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மாலை நடைபெறஉள்ளது. ஏற்கனவே இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி கடுமையாக பயிற்சி செய்து வரும் நிலையில், இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு பதிவினை பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய அணி வீரர்களான தோனி, கோலி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் கடும் வெயிலில் வியர்க்க, வியர்க்க பயிற்சியினை மேற்கொண்டு வருவதாக பி.சி.சி.ஐ பதிவிட்டுள்ளது. இதோ அந்த பதிவு உங்களுக்காக :

நாளைக்கு நடக்கவிருக்கும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் ? ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா ? என்று நாளைய போட்டி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைய உள்ளது.

இதையும் படிக்கலாமே :

சொன்னதை போன்றே இங்கிலாந்தை திருப்பி அடித்த மே.இ தீவுகள் அணி. 2 ஆவது போட்டியில் வெற்றியை கைப்பற்றியது. கெயில் எவ்வளவு ரன் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்