உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட – ஐ.சி.சி தலைவர்

Dave
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து ஐ.சி.சி. தலைவரான டேவ் ரிச்சர்ட்ஸன் ஒரு முக்கியதகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் டேவ் ரிச்சர்ட்ஸன் கூறியதாவது : இந்த வருடம் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு எதிரியான பிரச்சனை அந்த நாடுகள் சுமூகமாக தீர்த்துக்கொள்ளட்டும். அதை போட்டிகளில் காட்டவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Ind-Pak

திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும் என்று அவர் தெரிவித்தாலும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் பங்கேற்குமா என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்ய அனுமதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனி மற்றும் கோலி ஆகியோர் உலகக்கோப்பை போட்டிகளில் இடம் மாற்றி களமிறக்க படுவார்கள் – ரவி சாஸ்திரி அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -