ட்ரெண்ட் போல்ட் மற்றும் முஹமதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதுக்குலாமா அபராதம் விதிப்பீர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா ?

Bolt

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி தற்போது அவர்களது மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி 16ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து முடிந்தது.

Nz vs Ban

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 49.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி குப்திலின் சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நியூசிலாந்து வீரரான ட்ரெண்ட் போல்ட்க்கு போட்டி ஊதியத்திலிருந்து 15% மற்றும் வங்கதேச வீரரான முஹமதுல்லா 10% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ட்ரெண்ட் போல்ட் பந்துவீசிய போது விக்கெட்டை வீழ்த்திவிட்டு தனது கொண்டாட்டத்தை எதிரணி வீரரை அவமதிக்கும்படி கொண்டாடியதால் அவர்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

trent boult

முஹமதுல்லா அவுட் ஆகி வெளியே சென்றதும் மைதான பொருட்களை சேதப்படுத்தியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பைக்கு முன் இவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவே தினேஷ் கார்த்திகை நீக்கினோம் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்