உலகக்கோப்பைக்கு முன் இவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவே தினேஷ் கார்த்திகை நீக்கினோம் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

msk
- Advertisement -

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

dhoni karthick

இந்த தொடரின் டி20 போட்டிகளில் இடம்பிடித்துள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ஒருநாள் அணியில் விளையாடுகிறார். இதுகுறித்து தற்போது இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் பிரசாத் கூறியதாவது : இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி ரன்களை குவித்து வருகிறார். ஆனாலும், அவருக்கு இன்னும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறன். எனவே, தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக பண்டிற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளோம்.

- Advertisement -

இருப்பினும், உலகக்கோப்பை தொடரில் கார்த்திக் நிச்சயம் இடம்பிடிப்பார் என்றும் பிரசாத் தெரிவித்தார். இந்திய அணிக்காக சமீபமாக அறிமுகம் ஆகி அசத்தி வருகிறார் பண்ட். அவரின் பயமில்லா அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடக்கூடாது – பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -