ரிஷப் பண்டை கிண்டல் செய்து ஐ.சி.சி பதிவு செய்த ட்வீட். ரசிகர்கள் அதிகம் ரசித்த பதிவாக மாறியுள்ளது – ட்வீட் உள்ளே

pant-laugh

ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி கிரிக்கெட் நிர்வாகம் உலகின் உள்ள அனைத்து கிரிக்கெட் நாடுகளில் இருந்து விளையாடும் வீரர்களை உற்று கவனித்து அதிலிருந்து சிறந்த ஒருநாள் போட்டி கவனித்து டெஸ்ட் வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் என பல பிரிவுகளில் தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது.

icc-awards

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் வீரராக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் ரிஷப் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன பண்ட் அந்த தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து அசத்தினார். மேலும், அவர் அடித்த முதல் டெஸ்ட் ரன் சிக்ஸர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

ஆஸ்திரேலிய தொடரின் போது டிம் பெயின் அவரை தனது குழந்தைகளை பராமரிக்க அழைத்ததும் பிறகு, பண்ட் பெயின் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது 2018 ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை பெற்ற பண்டை கலாய்த்து ஐ.சி.சி போட்ட ஒரு ட்வீட் தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவாக இருக்கிறது. இதோ அந்த ட்வீட் உங்களுக்காக :

அதில், சிறந்த குழந்தை பாராமரிப்பாளரும் மற்றும் சிறந்த கிரிக்கெட்டருமான பண்ட்க்கு வாழ்த்துக்கள் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர் .

இதையும் படிக்கலாமே :

ரசிகர்கள் ஷாக். கோலி அதிரடி நீக்கம். நியூசி அணிக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் ரோஹித் கேப்டனாக அறிவிப்பு – பி.சி.சி.ஐ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்