ரசிகர்கள் ஷாக். கோலி அதிரடி நீக்கம். நியூசி அணிக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் ரோஹித் கேப்டனாக அறிவிப்பு – பி.சி.சி.ஐ

Rohith

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

ind vs nz trophy

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ -யிடம் இருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதில், 5 ஒருநாள் போட்டிகள் இந்த தொடரின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். மேலும், அந்த இரு ஆட்டங்களிலும் கோலி விளையாட வேண்டாம் என்றும் மேலும், டி20 போட்டிகளுக்கும் கோலிக்கு ஓய்வினை அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ.

koli

உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது பி.சி.சி.ஐ. இதனால் நல்ல பார்மில் இருக்கும்போது விராட் கோலியின் ஆட்டத்தினை பார்க்க முடியாமல் போகிறதே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

போட்டி முடிந்ததும் கேமரா மேனின் வண்டியில் பயணித்த தல தோனி மற்றும் கிங் கோலி – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்