நம்ம தல தோனியின் ஸ்டம்பிங் குறித்து உலக கிரிக்கெட் வீரர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கிய – ஐ.சி.சி

icc-dhoni

இந்திய அணி தற்போது மியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை வென்று, அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் இந்த ஒருநாள் தொடர் வெற்றி உலகின் உள்ள பல்வேறு வீரர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ms

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளது. அதில் ஐ.சி.சி. தோனி பற்றி கூறியதாவது :

தோனி ஸ்டம்புக்கு பின்னால் இருக்கும் வரை யாரும் கிரீசை விட்டு வெளியேற வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பின்னால் தோனி என்பவர் உள்ளார் மறவாதீர்கள் . என்ற வாசகத்தை பயன்படுத்தி ட்வீட் செய்து உள்ளது. இப்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்வீட் உங்களுக்காக :

ஐ.சி.சி -யின் இந்த ட்வீட் தற்போது இணையதள வாசிகள் இடையே பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தோனியின் ரசிகர்கள் இந்த டட்விட்டை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் திறமையான ஆல்ரவுண்டர் இவரே. எவர் க்ரீன் பிளேயரும் இவரே. கவாஸ்கர் – புகழாரம

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்