ஜில்லுனு ஒரு அழகை சில நிமிடங்களில் பெற, ஐஸ் க்யூப் குறிப்புகள். பிறகு நீங்களும் எப்போதும் கூலாக இருப்பீங்க.

face19
- Advertisement -

ஜில்லுனு ஒரு அழகு குறிப்பை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருக்கு தங்களுடைய அழகை பராமரிப்பதற்கு கூட நேரம் இருக்காது. அதாவது அழகை பராமரிப்பது என்றால் வாரத்திற்கு ஒரு முறை பியூட்டி பார்லருக்கு செல்வது கிடையாது. இயற்கையான முறையில் நம்முடைய சருமத்தை நம்முடைய இளமையை பாதுகாத்துக் கொள்ள நாம் சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். அதில் முதலாவது விஷயம். ஆரோக்கியமான உணவினை சாப்பிடுவது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும். ஆரோக்கியம் கெட்டுப் போய்விட்டால் பிறகு அழகும் கெட்டுப் போய்விடும். ஆகவே ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துங்கள். அழகு தானாக உங்களைத் தேடி வரும்.

சரி இன்னைக்கான ஜில்லுனு 5 அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். பின் சொல்லக்கூடிய அனைத்து அழகு குறிப்புகளுமே ஐஸ் கியூப் பயன்படுத்திதான் பார்க்கப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் இந்த அழகு குறிப்புகளை பின்பற்றி வந்தாலே போதும். நீங்கள் மேக்கப் போடாமலேயே அழகு சிலை போல ஜொலிக்கலாம்.

- Advertisement -

தக்காளி பழத்தில் ஐஸ் க்யூப்:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு தேவையான அளவு தக்காளி பழங்களை போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தக்காளி பழ சாரில் தேன் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து ஐஸ் டிரைவில் ஊற்றி அப்படியே ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். தேவைப்படும்போது ஒரு ஐஸ்க்யூப்பை எடுத்து மெல்லிசான ஒரு வெள்ளை காட்டன் துணியில் வைத்து முகத்தை ஐந்து நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்தால் முகம் உடனடியாக பொலிவு பெறும்.

அலோவேரா ஜெல் ஐஸ் க்யூப்:
ஒரு சிறிய பவுலில் அலோவேரா ஜெல் 4 ஸ்பூன், 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து இதை அப்படியே ஐஸ் ரேபில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். ஐஸ்கட்டிகள் தயாராகிவிடும். நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு மேக்கப் போடுவதற்கு முன்பு இதிலிருந்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து ஜென்டில் ஆக ஐந்து நிமிடம் உங்களுடைய முகத்தை மசாஜ் செய்து கொண்டால் முகம் டிரை ஆகாமல் இருக்கும். போட்ட மேக்கப் நீண்ட நேரத்திற்கு கலையாது.

- Advertisement -

ரோஸ் வாட்டர் ஐஸ் க்யூப்:
ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 கப் அளவு ரோஸ் வாட்டர், பாதாம் ஆயில் 2 ஸ்பூன், ஊற்றி நன்றாக கலந்து இதை ஐஸ் ட்ரைவில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகம் கழுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்தால் முகம் ரிலாக்ஸ் ஆக மாறும். முகம் குளிர்ச்சியாகி நிம்மதியான தூக்கம் வரும்.

பாலில் ஐஸ் கியூப்:
காய்ச்சாத பால் 1/2 கப், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து கலந்து இதை ஐஸ் ட்ரோவில் ஊற்றி வைத்து விட வேண்டும். இந்த ஐஸ்கட்டிகள் தயாரான பிறகு இதை எடுத்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து கொடுத்தால் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள் பிக்மென்டேஷன் குறைய தொடங்கும்.

- Advertisement -