அட, இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே! இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா? முகம் வியர்த்து மேக்கப் கலைந்து போகாதா?

face6
- Advertisement -

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் வெயிலில் வெளியே செல்லும் போது தங்களுடைய முகத்தில் இருக்கும் அழகு குறையக்கூடாது என்று தான் நினைப்பார்கள். முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் வியர்த்து விடிந்தால், நம்முடைய முகம் தானாக சோர்வடைந்து விடும். வெயிலில் போனாலும் நம்முடைய முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள மிக மிக சுலபமான முறையில் ஒரு வழி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் சன்டேன் சீக்கிரமே நீங்கிவிடும். நம்முடைய முகத்தை ஜில்லென்று பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face7

நம்முடைய முகம் எப்போதும் பளிச் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிலேயே சுலபமாக தினமும் 5 லிருந்து 10 நிமிடங்கள் இந்த மசாஜ் செய்ய வேண்டும். அது எந்த மசாஜ்? ஒரு ரூபாய் செலவு கூட செய்ய வேண்டாம். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி போதும், உங்களை வெயிலிலும் சோர்வடையாமல் பாதுகாத்துக் கொள்ள.

- Advertisement -

ஐஸ் கியூபை உங்கள் கையில் எடுத்து நேரடியாக உங்களுடைய முகத்தில் வைத்து, முகம் முழுவதிலும் வட்டவடிவமாக மசாஜ் செய்து கொடுக்கலாம். நேரடியாக முகத்தில் வைக்க முடியாது என்பவர்கள் ஒரு காட்டன் துணியில் இந்த ஐஸ் கியூபை வைத்து முகத்தை வட்டவடிவமாக மசாஜ் செய்யவேண்டும் கழுத்துப் பகுதிகளிலும் ஐஸ் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். 2 ஐஸ் க்யூப் கரையும் வரை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தாராளமாக மசாஜ் செய்யலாம்.

face8

முடிந்தால் உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த ஐஸ் கியூபை ஃபிரீசரில் ஊற்றி வைக்கும் போது அந்த தண்ணீரோடு சில பொருட்களை சேர்த்து கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டிற்கு கேரட் சாறு, பீட்ரூட் சாறு, புதினா இலைகளை துண்டு துண்டாக வெட்டிப் போட்டுக் கொள்ளலாம். அந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை பழச் சாறு, தக்காளி பழச்சாறு சேர்க்கலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

- Advertisement -

இப்படி ஐஸ் கியூபை வைத்து உங்களுடைய முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் இருக்கும் சிறிய சிறிய துவாரங்கள் open pores என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த சிறிய சிறிய தழும்புகள் ஓட்டைகள் சீக்கிரமே மறைய ஆரம்பிக்கும். ஜில்லென்ற ஐஸ் மசாஜை முகத்தில் செய்துவிட்டு அதன் பின்பு உங்களுடைய முகத்தை வெறும் தண்ணீரால் கழுவி விட்டுங்கள். இப்போது பார்க்கும் போதே உங்களுடைய முகம் பளபளப்பாக இருப்பதை உணர முடியும்.

face20

அடுத்தபடியாக கொஞ்சம் தக்காளி சாறுடன் 1/2 ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து நன்றாக கலந்து முகத்தை ஒரு முறை 5 நிமிடங்கள் ஸ்கரப் செய்து மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் இந்த பேக்கை முகத்தில் காயவிட்டு கழுவி விடுங்கள். இதற்குப் பின்பு, நீங்கள் மேக்கப் போடுபவர்களாக இருந்தால் போட்டுக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு கிரீம் பவுடர் மட்டும் போட்டுக் கொள்வதாக இருந்தாலும் போட்டுக்கொண்டு வெளியே செல்லலாம்.

face11

வெயிலில் இப்படி வெளியே சென்றால் உங்களுடைய சருமம் அவ்வளவு சீக்கிரத்தில் வியப்பதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுடைய முகம் நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை பெறும். இந்த ஐஸ் க்யூப் மசாஜை ஒருநாள் விட்டு ஒருநாள் தாராளமாக செய்யலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமாக திரும்பத் திரும்ப இத செஞ்சிட்டே இருப்பீங்க. அந்த அளவுக்கு ஒரு முறையிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும் ரிமெடி இது.

- Advertisement -