- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய இடி சாம்பாரை இவ்வளவு ஈஸியா செய்யலாமா? வாங்க எப்படின்னு பாக்கலாம்.

அட திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய இடி சாம்பாரை இவ்வளவு ஈஸியா செய்யலாமா? வாங்க எப்படின்னு பாக்கலாம்.

- Advertisement -

சாம்பார் என்றாலே அதில் பல வகை உண்டு. இட்லி தோசை போன்றவைகளுக்கு வைக்கப்படும் சாம்பார் ஒரு விதமாகவும், பொங்கல் இவற்றிற்கு வைக்கப்படும் சாம்பார் ஒரு விதமாகவும், சாப்பாட்டுக்கு ஒரு விதமாகவும் இப்படி ஒவ்வொன்றுக்கும் வைக்கப்படும் சாம்பார் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். அதே போல்இந்த சாம்பாரின் ருசியானது ஊருக்கு ஊர் மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இதற்கான செய்முறை வேறு விதமாகத்தான் இருக்கும். அதே போல் தான் இந்த திருநெல்வேலி இடி சாம்பாரும். இதில் சேர்க்கப்படும் மசாலா தான் இந்த சாம்பாருக்கான தனி சுவையே கொடுக்கும். அந்த வகையில் இந்த இடி சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்: வரமல்லி – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், துவரம் பருப்பு – 1 ஸ்பூன், மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

- Advertisement -

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 10, தக்காளி -2, , நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், கேரட் – 1, முருங்கைக்காய் – 2, மாங்காய் – 1, கத்தரிக்காய் – 2 ,பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

முதலில் துவரம் பருப்பை நன்றாக அலசி கழுவி தண்ணீர் வடித்து ஒரு குக்கரில் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூளும் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்த உடன், அரிந்து வைத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இது ஓரளவுக்கு வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் (மாங்காவை தவிர) மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இதை வேக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் வெந்து கொண்டு இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது இடி சாம்பாருக்கு தேவையான மசாலா அரைத்து கொள்வோம். அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து சூடானதும் அதில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் வர மல்லி, அனைத்தையும் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைத்து மசாலாவை ஆற வைத்துக் கொள்ளுங்கள். மசாலா நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளில் வேகவைத்த பருப்புபை சேர்த்த பிறகு வறுத்த மசாலாவில் ஒரே ஒரு ஸ்பூன் மசாலா மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதியை அந்த சாம்பாரில் சேர்த்து, இத்துடன் மாங்காவும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் புளியும் கரைத்து இதில் சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

சாம்பார் நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் போது துருவிய தேங்காயும் எடுத்து வைத்த மசாலாவையும் சேர்த்து கலக்கி லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கிராமத்து ஸ்டைலில் புதினா துவையல் 10 நிமிடத்தில் அரைப்பது எப்படி? இப்படி ஒரு முறை புதினா துவையல் செஞ்சா 10 இட்லி கூட சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருக்கலாமே!

இப்போது ஒரு சின்ன கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளி தாளித்து அதில் கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்து இந்த சாம்பாரில் ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான் திருநெல்வேலி ஸ்பெஷல் இடி சாம்பார் தயார்.

சற்று முன்