1/2 கப் இட்லி மாவு இருந்தால் 10 நிமிடத்தில் வித்தியாசமான சுவையில் தின்னத் தின்னத் திகட்டாத போண்டா செய்து சாப்பிடலாமே!

idli-batter-bonda
- Advertisement -

வீட்டில் இருந்தால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஒரு புறம் குழந்தைகளும், இன்னொருபுறம் வளர்ந்த பெரியவர்களும் கூட நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தெரிந்ததையே அடிக்கடி செய்து கொடுத்து அவர்களுக்கு போர் அடிக்கவும் ஆரம்பித்திருக்கும். தின்னத் தின்னத் திகட்டாத இட்லி மாவு போண்டா பத்தே நிமிடத்தில் ஈசியாக செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடலாம். இதற்கு அரை கப் இட்லி மாவு இருந்தால் போதும், நிமிடத்தில் வித்தியாசமான சுவையுடன் கூடிய அட்டகாசமான போண்டா செய்யலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

idly-maavu

‘இட்லி மாவு போண்டா’ செய்ய தேவையான பொருட்கள்”
இட்லி மாவு – அரை கப்
கோதுமை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்

- Advertisement -

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவிற்கு

adai-maavu

தேங்காய் – அரை மூடி
வர மிளகாய் – மூன்று
பூண்டுப் பல் – ஆறு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

- Advertisement -

‘இட்லி மாவு போண்டா’ செய்யும் முறை விளக்கம்:
முதலில் தேங்காயை அரை மூடி அளவிற்கு துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, வர மிளகாய், உரித்த பூண்டு பற்கள், கொஞ்சம் கருவேப்பிலை, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொரகொரவென்று லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது. கெட்டியாக உருண்டை உருட்டும் அளவிற்கு மாவு நைசாக வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரைத்து எடுத்து வைத்துள்ள இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

idli-maavu-bonda2

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு இட்லி மாவு சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் அரை டீஸ்பூன், மிளகுத் தூள் அரை டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்து இருப்பதால் இந்த மாவில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளையும் எடுத்து கலந்து வைத்துள்ள இட்லி மாவில் முக்கி கரண்டியால் எடுத்து அழகாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும். கைகளால் போடுவதை விட கரண்டியால் போடும் பொழுது மாவு சிந்தாமல், சிதறாமல் வரும். எல்லா பக்கமும் பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாற வேண்டியது தான். மிக மிக வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த இட்லி மாவு போண்டா எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள். நீங்களும் ஒருமுறை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -