- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்புசு புசுன்னு சாஃப்டான இட்லி மாவு அரைக்க இந்த ரேஷியோவில் ஒரு முறை ட்ரை பண்ணி...

புசு புசுன்னு சாஃப்டான இட்லி மாவு அரைக்க இந்த ரேஷியோவில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! பஞ்சு போல குஷ்பூ இட்லி பொங்கி வரும்.

- Advertisement -

சாஃப்டான இட்லி மாவு அரைப்பது என்பது எல்லோருக்கும் வருவதில்லை. பலரும் பஞ்சு போல இட்லி தயாரிக்க திணறி வருகிறார்கள். நாம் பயன்படுத்தும் அரிசி மற்றும் உளுந்தின் அளவை வைத்தும், அரைக்கும் முறையும் தான் இட்லி பஞ்சு போல வருவதற்கு காரணம். இந்த ரேஷியோவில் நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுடைய இட்லியும் குஷ்பூ இட்லி போல புசுபுசுன்னு சூப்பராக வரும். பஞ்சு போல சாஃப்டான இட்லி தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – ஐந்து டம்ளர், வெள்ளை அவல் – ஒரு டம்ளர், வெள்ளை உளுந்து – ஒன்றரை டம்ளர், வெந்தயம் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

இந்த இட்லி மாவு அரைக்க மேற்கூறிய அளவுகளின் படி எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பழக்கப்படி அளவுகளை அளந்து தான் இட்லி மாவு அரைக்கிறோம். இந்த முறையில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் இதே போல இட்லி சாஃப்டாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஐந்து ஆழாக்கு இட்லி அரிசிக்கு, ஒன்றரை ஆழாக்கு உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக நான்கைந்து முறை அலசி சுத்தம் செய்து சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றும் பொழுது சற்று அதிகமாகவே ஊற்றுங்கள். பிறகு அதே அளவில் ஒரு ஆழாக்கு அளவிற்கு வெள்ளை அவல் சேர்த்துக் கொள்ளுங்கள். அவல் சேர்க்கும் பொழுது இட்லி தோசை பஞ்சு போல மிருதுவாக வரும் மற்றும் நிறமும் வெள்ளையாக இருக்கும். உளுந்து ஊற வைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊற வையுங்கள். தோசை மொறு மொறுவென்று சிவந்து வருவதற்கு உதவும்.

- Advertisement -

அனைத்தையும் இரவு தூங்க செல்லும் முன் ஊற வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் அரைத்துக் கொள்ளலாம். காலையில் கிரைண்டரில் முதலில் உளுந்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஆட்டிய மாவை தண்ணீரில் போட்டால் பந்து போல மிதக்க வேண்டும். அது தான் உளுந்து அரைக்கும் சரியான பதம் ஆகும். கிரைண்டர் சூடானால் நீங்கள் ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டரை பயன்படுத்தி அரைக்கலாம்.

பிறகு 20 நிமிடம் நீங்கள் ஊற வைத்த அரிசி மற்றும் அவலை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ரொம்பவும் நைசாக அல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் அரிசி மற்றும் உளுந்தை ஒன்றாக சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கைகளால் கரைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெங்காயம் தக்காளி காய்கறி எதுவும் சேர்க்காம சப்பாத்தி பூரி பரோட்டா நாண் எல்லாத்துக்கும் ஏற்ற பிளைன் சால்னா . இப்படி ஒரு சிம்பிள் ரெசிபியை இத்தனை நாள் தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே.

கரைத்து வைத்துள்ள மாவை இரண்டாக பிரித்து ஒரு டப்பாவை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டப்பாகில் இருக்கக்கூடிய மாவை 8 மணி நேரம் புளிக்க விட்டு அடிவரை சேர்த்து கிண்டாமல், மேலோட்டமாக நன்கு கலந்து இட்லி சுட்டுப் பாருங்கள், பஞ்சு போல மிருதுவான இட்லி கண்டிப்பாக வரும்.

சற்று முன்