வெங்காயம் தக்காளி காய்கறி எதுவும் சேர்க்காம சப்பாத்தி பூரி பரோட்டா நாண் எல்லாத்துக்கும் ஏற்ற பிளைன் சால்னா . இப்படி ஒரு சிம்பிள் ரெசிபியை இத்தனை நாள் தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே.

- Advertisement -

இன்றைய அவசரமான காலத்திற்கு ஏற்பவும் விலைவாசி செலவை குறைப்பதிலும் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். அந்த வகையில் நாம் செய்யும் சமையலும் அப்படித் தான். அதிகமான பொருட்செலவு இல்லாமல் எளிமையான முறையில் அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளுக்கு தான் எப்போதும் முதலிடம். அப்படி ஒரு சுவையான எளிமையான கிரேவி ரெசிபி பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளுங்கள். அத்துடன் 5 முந்திரி, 1 டீஸ்பூன் கசகசா, 5 பல் பூண்டு 1இன்சி இஞ்சி,1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு பவுலில் அதிகம் புளிக்காத தயிர் கால் கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 1ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு தனியாக குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து சூடானதும் அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் பட்டர் சேர்த்து உருக விடுங்கள். இதில் பட்டர் சேர்ப்பது உங்கள் விருப்பம் தேவையில்லை எனில் கூடுதலாக கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். பட்டர் உருகியவுடன் 1/4 டீஸ்பூன் சோம்பு, 1 பட்டை, 1 லவங்கம், 1 ஏலக்காய் மட்டும் சேர்த்த பிறகு குழைத்து வைத்த தயிர் மிளகாய்த் தூள் கலவையை இதில் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து எண்ணெயிலேயே வதக்க வேண்டும்.

- Advertisement -

இது வதங்கிய பிறகு எண்ணெய்ப் பிரிந்து மேலே வந்தவுடன், ஏற்கனவே அரைத்து வைத்து மசாலா விழுதை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிய பிறகு இப்போது தேவைக்கு உப்பு சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு ஒரு கைப்பிடி கொத்தமல்லி கொஞ்சம் புதினா தழைகளை மேலே தூவி இறக்கி விடுங்கள் அருமையான சைட் டிஷ் தயார்.

இதையும் படிக்கலாமே: இந்த மசாலாவை அரைத்து போட்டு கோவக்காய் வறுவல் செஞ்சி பாருங்களேன்! கோவக்காயை இதுவரை தொடாதவர்கள் கூட அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க.

இது அனைத்து டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும். பரோட்டா, சப்பாத்தி, நாண் போன்றவைகளுக்கு மிகவும் பர்ஃபெக்டான காம்பினேஷன். மிக மிக எளிமையான இந்த சால்னாவை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -