உங்க வீட்டில் மீந்து போன இட்லி மாவு இருக்கா? அப்படின்னா மாலையில் டீ, காபியுடன் சுட சுட போண்டாவை இப்படி 5 நிமிடத்தில் தயார் செய்து விடுங்கள்!

idli-maavu-bonda4
- Advertisement -

வீட்டில் கிலோ கிலோவாக இட்லி மாவை அரைத்து வைத்து விடுவோம். அது மீந்து போகும் பொழுது அதை என்ன செய்வது? என்று பலருக்கு தெரிவதில்லை. மீந்து போன இட்லி மாவை வைத்து விதவிதமான உணவு வகைகளை தயார் செய்யலாம், அதில் சுட சுட இப்படியும் போண்டா தயார் செய்ய முடியும் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். மாலையில் டீ, காபியுடன் ஸ்னாக்ஸ் வகை எதுவும் இல்லை என்றால் சட்டென இட்லி மாவில் நாலு பொருட்களை சேர்த்து போண்டா சுட்டு எடுத்து விடலாம். அதை எப்படி செய்வது? என இனி பார்ப்போம்.

dosai-maavu

இந்த போண்டா செய்வதற்கு கடலை மாவு, அரிசி மாவு என்று எதுவுமே தேவையில்லை! நம்மிடம் மீந்து போன புளித்த இட்லி மாவு இருந்தாலே போதும், சட்டென ஐந்தே நிமிடத்தில் எல்லாவற்றையும் தயார் செய்து சுட்டு விடலாம். மிக எளிமையாக செய்யக் கூடிய இந்த போண்டா சுவையில் எந்த குறையும் வைத்ததில்லை. மொறு மொறுவென்று கிரிஸ்பியாக இருக்கும் இந்த இட்லி மாவு போண்டா செய்ய என்ன தேவை? என்று பார்ப்போம்.

- Advertisement -

‘இட்லி மாவு போண்டா’ செய்ய தேவையான பொருட்கள்:
புளித்த இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 இன்ச்

idli-maavu-bonda1

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு
மிளகு – அரை டீஸ்பூன்
ரவை – அரை கப்

- Advertisement -

கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவிற்கு

idli-maavu-bonda2

‘இட்லி மாவு போண்டா’ செய்முறை விளக்கம்:
புளித்த மீந்து போன இட்லி மாவு இரண்டு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கொள்ளுங்கள்.

idli-maavu-bonda3

பின்னர் அரை கப் அளவிற்கு ரவை சேர்த்து நன்கு கெட்டியாக வடை மாவு பதத்தில் கிளறி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டையாக தனித்தனியாக சூடான எண்ணெயில் போட்டு கொள்ளுங்கள். போண்டா சிவக்க வறுபட்டதும் எல்லா பக்கமும் திருப்பி போடுங்கள்.

idli-maavu-bonda

எந்த நேரத்திலும் சுலபமாக செய்யக் கூடிய இந்த இட்லி மாவு போண்டா புளிப்பாக இருப்பதால் சோடா மாவு சேர்க்க தேவையில்லை எனவே ஆரோக்கியம் மிகுந்ததாகவும், மிகவும் ருசி உடையதாகவும் நிச்சயமாக இருக்கும். பிறகு எல்லா போண்டாக்களையும் எண்ணெய் வடிய ஒரு தட்டில் நியூஸ் பேப்பர் விரித்து அதன் மேல் வைத்து பரிமாற வேண்டியது தான். இந்த மாவு சரியான பதத்தில் கலந்தால் எண்ணெய்யும் அதிகமாக குடிக்காது என்பது சிறப்பம்சமாகும்.

- Advertisement -