சுட சுட கார போண்டா செய்ய மீந்து போன இட்லி மாவு இருந்தால் போதுமே! சுவையான கார போண்டா ரெசிபி எப்படி செய்வது?

idli-maavu-bonda4
- Advertisement -

புளித்த இட்லி மாவில் சூப்பரான சூடான மொறு மொறு என்று கிரிஸ்பியான கார போண்டா எப்படி செய்வது? கார போண்டா பொதுவாக அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்வது உண்டு ஆனால் இட்லி மாவில் இது போல ரொம்ப சுலபமாக மாலை நேரத்தில் செஞ்சு பாருங்க, டீயுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 2 கப், பூண்டு – இரண்டு பல், வரமிளகாய் – 3, அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், ரவை – ஒரு டேபிள் ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை விளக்கம்

இட்லி மாவு இரண்டு கப் அளவிற்கு புளித்ததாக எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் மாவு புளித்திருக்கக் கூடாது அதே சமயம் புளிக்காத மாவையும் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீந்து போன சற்று புளித்த இட்லி மாவு இதற்கு சரியாக இருக்கும். மூன்று வர மிளகாய்களை காம்பு நீக்கி சுடு தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வையுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்துள்ள மிளகாய் மற்றும் இதனுடன் ரெண்டு பல் பூண்டை தோல் உரித்து சேர்த்து நைசாக தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வர மிளகாயை ஊற வைக்கவில்லை என்றால் நைசாக அரைபடாது. பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கால் ஸ்பூன் சீரகத்தை வறுத்து ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இதனுடன் ஒரு குத்து கறிவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். பின்னர் வெங்காயம் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவையையும் மாவுடன் சேர்த்து இதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்டையும் சேருங்கள். மாவு கெட்டியாக இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரவை சேர்க்கலாம். வறுத்த அல்லது வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மாவு சற்று போண்டா மாவு பதத்திற்கு அதாவது இட்லி மாவு போல கெட்டியாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஹெல்த்தியான முருங்கைக்கீரை தோசை ஈசியாக செய்வது எப்படி? உங்க வீட்டில முருங்கை மரம் இருந்தால் இதை செய்ய மறக்காதீங்க!

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகளாக கையில் அல்லது கரண்டியில் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான இட்லி மாவு கார போண்டா ரெசிபி ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -