ஹெல்த்தியான முருங்கைக்கீரை தோசை ஈசியாக செய்வது எப்படி? உங்க வீட்டில முருங்கை மரம் இருந்தால் இதை செய்ய மறக்காதீங்க!

murungai-keerai-dosai1_tamil
- Advertisement -

உங்க வீட்டில் முருங்கை மரம் இருந்தால் மறக்காமல் வாரம் ரெண்டு முறையாவது இப்படி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்கு வழுபெறும். இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த கீரையை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. சுவையான முருங்கைக் கீரை தோசை சுலபமாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – இரண்டு கைப்பிடி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பூண்டு – இரண்டு பல், சின்ன வெங்காயம் – 4, பச்சை மிளகாய் – 1, மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – 3 சிட்டிகை, தோசை மாவு – 2 கப்.

- Advertisement -

செய்முறை

முருங்கைக் கீரை தோசை செய்வதற்கு முதலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரைகளை எடுத்து உருவி வைத்துக் கொள்ளுங்கள். பின் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் எல்லாம் வடிகட்டி செல்லுமாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டீஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு லேசாக சூடு ஏறியதும் அதில் பொடி பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் இவற்றை வதக்கியதும், ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் இதனுடன் அரை டீஸ்பூன் மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.

- Advertisement -

பின்னர் நீங்கள் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள முருங்கைக் கீரைகளை போட்டு வதக்குங்கள். ரெண்டு நிமிடம் வதக்கினால் முருங்கைக் கீரைகள் நன்கு சுருண்டு விடும். இந்த சமயத்தில் கீரைக்கு தேவையான அளவிற்கு மட்டும் உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 கப் அளவிற்கு தோசை மாவை எடுத்து அதனுடன் அரைத்து வைத்த இந்த பேஸ்ட்டை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த மிளகாய் தூள் போட்டு குழம்பு வைத்தால், குழம்போட வாசம் பக்கத்து தெரு வரைக்கும் வீசும். சைவம் அசைவம் 2 விதமான சமையலுக்கும் சேர்த்து ஒரே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து காய விடுங்கள். மாவு, இட்லி மாவு பதத்திற்கு அல்லாமல் தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அப்பொழுது தான் தோசை மொறு மொறுவென்று வார்க்க வரும். பின்னர் வழக்கம் போல நீங்கள் தோசையை மெல்லியதாக பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் நன்கு சிவக்க வெந்து வந்ததும் திருப்பி போடுங்கள். அவ்வளவுதான், சுவையான முருங்கைக் கீரை தோசை இப்பொழுது தயார்! ரொம்பவே சத்துள்ள இந்த தோசை ரெசிபி செய்வது சுலபம், நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -