வெறும் 10 நிமிடத்தில் இட்லி மாவில் சூப்பரான முறுக்கு சுடுவது எப்படி? அரிசி மாவு அரைச்சு முறுக்கு சுட்டாலும் இப்படி ஒரு சுவை கிடைக்காது பாருங்க.

murukku
- Advertisement -

பார்த்து பார்த்து அரிசி மாவு அரைத்து பக்கமாக முறுக்கு சுட்டாலும் இப்படி ஒரு சுவை நிச்சயம் கிடைக்காது. இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கப் மாவை தனியாக எடுத்து வைத்துவிட்டு இப்படி முறுக்கு சுட்டு பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் வாயில் வைத்தால் கரையும் அளவிற்கு இந்த முறுக்கு அவ்வளவு சாஃப்டாகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். எல்லோருக்கும் பிடித்த முறுக்கு ரெசிபி சுலபமாக இட்லி மாவில் செய்வது எப்படி. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் புளிக்காத இட்லி மாவு – 1 கப், பொட்டுக்கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 2 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு, எள்ளு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும். இட்லி மாவில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் தண்ணீர் ஊற்றாமல் இந்த மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளியுங்கள். அதன் பின்பு மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பக்குவமாக பிசைந்து கொள்ள வேண்டும். முறுக்கு குரலை எடுத்து அதன் உள்ளே எண்ணெய் தடவி தயாராக இருக்கும் முறுக்கு மாவிலிருந்து சிறு பாகத்தை எடுத்து முறுக்குக் குழாயில் போட்டு ஒருமுறை முறுக்கை பிழிந்து பாருங்கள்.

நாம் முறுக்கு குழாயில் இருந்து பிழியக்கூடிய முறுக்கு, உடையாமல் அப்படியே அச்சில் இருந்து வெளிவர வேண்டும். அப்படி இருந்தால் தான் முறுக்கு பிசைந்த மாவு சரியான பக்குவத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அவ்வளவு தான் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ளுங்கள். வழக்கம்போல கரண்டியை கவிழ்த்துப் போட்டு அதில் எண்ணெய் தடவி தேன்குழல் முறுக்கு பிழிந்து, கடாயில் சூடாக இருக்கும் எண்ணெயில் விட்டு சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான முறுக்கு தயார்.

- Advertisement -

ஒரு கப் அளவு பொட்டுக்கடலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து, பொட்டுக்கடலை மாவு தயார் செய்யது சலித்து முறுக்கு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடிச்சிருந்தா ஒருமுறை உங்க வீட்ல இந்த சுலபமான முழுக்கை ட்ரை பண்ணி பாருங்க. கஷ்டப்படாமல் சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் கிடைக்கும்.

பின்குறிப்பு: முறுக்கு மாவு பிசையும் போது ரொம்பவும் கட்டியாக இருந்தாலும் முறுக்கு சரியாக வராது. தண்ணீர் தெளித்து பிசையயும் போது, மாவு கொஞ்சம் தளதளவென ஆகிவிட்டது என்றால் கூட கொஞ்சம் பொட்டுக்கடலை மாவையும் அரிசி மாவையும் சேர்த்து அட்ஜஸ்ட் செய்து முறுக்கு சுட்டால் சரியாக வரும். ஆக புதியதாக சமையல் செய்ய பழகுபவர்கள் கூட சுலபமாக இந்த முறுக்கை பயப்படாமல் செய்து அசத்தலாம்.

- Advertisement -