- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இட்லிக்கு மாவு அரைக்க இனி 1 மணி நேரம் கஷ்டப்பட வேண்டாம். கஷ்டமே இல்லாமல் வெறும்...

இட்லிக்கு மாவு அரைக்க இனி 1 மணி நேரம் கஷ்டப்பட வேண்டாம். கஷ்டமே இல்லாமல் வெறும் 10 நிமிடத்தில் இட்லி மாவை அரைத்தெடுக்க இதோ சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

சில பேருக்கு இட்லிக்கு மாவு அரைக்க வேண்டும் என்று சொன்னாலே சோம்பேறித்தனம் வந்துவிடும். கிரைண்டரில் 1 மணி நேரம் மாவை ஆட்டி எடுக்க வேண்டுமா என்ற கஷ்டம். அந்த காலத்தில் நம் அம்மா, பாட்டி, எல்லாம் ஆட்டு கல்லில் மாவை கஷ்டப்பட்டு அரைசாங்க. இன்னைக்கு கிரைண்டரில் மாவு ஆட்டவே நமக்கு கஷ்டமா இருக்குது. சரி என்ன செய்வது. அதிலும் ஒரு சுலபமான குறிப்பு தேட வேண்டியதாக உள்ளதே. சிரமப்படாமல் புசுபுசுவென உளுந்து மாவை அரைத்து, அரிசி மாவை அரைக்க, ஒரு சூப்பர் ஐடியா இந்த குறிப்பில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் படித்து பலன் பெறலாம்.

உங்களுடைய வீட்டில் வழக்கம் போல இட்லி அரிசி, உளுந்தம் பருப்பை எந்த அளவில் போடுவிங்களோ அந்த அளவுக்கு அளந்து எடுத்து போட்டு தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு அதன் பின்பு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி கட்டாயமாக 5 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் ஊற வேண்டும். உளுந்து 1 மணி நேரம் வரை ஊறினால் கூட போதும்.

- Advertisement -

ஊறிய இந்த உளுந்தை முதலில் மிக்ஸி ஜாரில் போட்டு அரைங்க. மொழு மொழுன்னு அரைக்க கூடாது. உளுந்து ஒன்றும் இரண்டுமாக அரைபட்டு வந்தால் மட்டும் போதும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக ஊறவைத்த உளுந்தை பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எல்லாவற்றையும் ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி அரைத்தால் மிக குறைந்த அளவில் நமக்கு அரைபட்ட உளுந்து கிடைத்திருக்கும். (75 % உளுந்து மிக்ஸி ஜாரில் அரைபட வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.)

இந்த உளுந்தை இப்போது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் கிரைண்டரை ஓட விட்டாலே போதும். உளுந்து புசுபுசுவென பொங்கி அரைபட்டு கிடைத்துவிடும். வழக்கமாக நீங்கள் முழு உளுந்தை கிரைண்டரில் நேரடியாக போட்டு ஆட்டி எடுக்க கூடிய உளுந்த மாவு அளவுக்கும், ‘இப்படி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்த உளுந்தை, மீண்டும் கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்த உளுந்த மாவுக்கும், அளவில் வித்தியாசத்தை பாருங்க. பிறகு அடுத்த முறை இட்லிக்கு உளுந்து ஊற வைக்கும்போது, வழக்கத்தை விட குறைந்த உளுந்தை ஊற வைப்பீங்க. அந்த அளவிற்கு உளுந்து உபரியாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த ஐடியாவை படிப்பதற்கு வேண்டும் என்றால் கொஞ்சம் நச நசன்னு, என்னடா இது, மிக்ஸியில் போடணும், அப்புறம் கிரைண்டரில் போடணும், அப்புறம் அதை ஆட்டி எடுக்கணுமா? அப்படின்னு தோன்றும். ஆனால், இது ஒரு சிம்பிளான வேலைதான். செய்யும் போது சுலபமாக இருக்கும். நிறைய பேர் இதை ட்ரை பண்ணி பார்த்தும் இருக்காங்க. நீங்க ஒரே ஒருமுறை ட்ரை பண்ணுங்க உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறமா விட்டுவிடலாம்.

பிறகு 5 மணி நேரம் ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டால் எட்டு நிமிடத்தில் மாவு சரியான பக்குவத்தில் அரைந்து உங்களுக்கு கிடைத்து விடும். நன்றாக அரிசி ஊறவில்லை என்றால் தான் அரிசி மாவு அரைபட கொஞ்சம் நேரம் எடுக்கும். உங்கள் வீட்டு கிரைண்டர் கொஞ்சம் ஸ்லோவாக அரைபடும் என்றால், பத்து நிமிடங்கள் எடுக்கலாம். அவ்வளவு தான் அரைத்த இட்லி மாவையும் உளுந்து மாவையும் கரைத்து மூடி போட்டு புளிக்க வையுங்க. வேலை முடிந்தது.

பின்குறிப்பு: இப்போது மிக்ஸி ஜாரில் உளுந்தை அரைத்து இருக்கிறோம் அல்லவா. அந்த மிக்ஸி ஜாரை கழுவுவதில் சிரமம் இருக்கும். அதுக்கும் ஒரு சுலபமான டிப்ஸ் இதோ. மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு, ஒரு ஓட்டு ஓட்டுங்க. அதுவே கழுவிடும். அப்புறமா எப்போதும் போல சோப்பு போட்டு கழுவிட்டால் சுத்தமா சுத்தமாயிரும். அதேசமயம் மிக்ஸி ஜாரில் கல் உப்பை போட்டு அரைப்பதால் உங்களுடைய மிக்ஸி பிளைடு கூர்மையாக இருக்கும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா பயனுள்ளதாக இருக்கும்.

சற்று முன்