15 நாட்கள் ஆனாலும் அரைத்த இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதோ ஒரு புத்தம் புதிய ஐடியா.

idli-mavu1
- Advertisement -

இட்லி மாவு புளிக்காமல் இருக்க நிறைய ஐடியா இருக்கு. அந்த ஐடியாக்கள் நிறைய பேருக்கு தெரிந்தும் இருக்கும். இருப்பினும் தெரியாத சில பேருக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக அமையும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு, இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் கூட மாவை மூன்று நாட்கள் வரை புளிக்காமல் பாதுகாக்க என்ன செய்வது என்ற ஒரு குறிப்பு இந்த பதிவில் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பை படித்து பலன் பெறலாம்.

முதலில் பிரிட்ஜில் 15 நாட்கள் மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்வது என்று பார்த்து விடுவோம். ஊறவைக்கக்கூடிய அரிசி பருப்பு மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் கூறக்கூடாது. ரொம்ப நேரம் தண்ணீரில் அரிசி பருப்பு ஊறினால் அரைத்த மாவு சீக்கிரம் புளித்து போய்விடும். ஆகவே ஊறும் நேரத்தை சரியாக கணக்கு வைத்து கிரைண்டரில் மாவை ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கிரைண்டரில் மாவு ஆட்டும் போது கட்டாயமாக அந்த கிரைண்டர் சூடு ஆகும். அப்படி சூடாகும் போது மாவு சீக்கிரம் புளிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே ஐஸ் வாட்டர் ஊற்றி மாவு அரைப்பது நல்லது. அதேசமயம் உளுத்தம் பருப்பு அரிசியை எல்லாம் கிரைண்டரில் அரைக்கும் போது தள்ளிவிட கையை பயன்படுத்தக் கூடாது. ஒரு மர கரண்டி அல்லது சிலிக்கான் கரண்டியை பயன்படுத்துங்கள்.

அரைத்த அரிசி மாவையும் உளுந்த மாவையும் கையைப் போட்டு கரைத்தால், சீக்கிரம் புளித்து விடும். கரண்டியை போட்டு கலக்கினால் சீக்கிரம் மாவு புளிக்காது. அதேசமயம் உப்பு போடாமல் மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சில்வர் டப்பாவை எடுத்துக்கோங்க. அதில் அடிப்பக்கத்தில் வாழை இலையை வைக்க வேண்டும். டப்பாவுக்கு அடியில் வாழை இலையை வைக்கும் போது, எப்போதும் போல நாம் சாப்பிடக்கூடிய பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த வாழை இலைக்கு மேலே புளிக்காத அரைத்த மாவை ஊற்றி விடுங்கள். மாவு ஊற்றிய பின்பு மாவுக்கு மேலே ஒரு வாழை இலையை கவிழ்த்து போட்டு டப்பாவை மூடி இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் வரை புளிக்காமல் இருக்கும். இந்த மாவில் உப்பு சேர்க்கக்கூடாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (நாளைக்கு தேவையான மாவை அளவாக எடுத்து உப்பு போட்டு கலந்து பிரிட்ஜில் இருந்து வெளியில் வைத்தால் ஆறு மணி நேரம் கழித்து புளித்து வரும்.)

வாழை இலை இல்லை என்றால், வாழை இலைக்கு பதிலாக இரண்டு வெற்றிலையை கூட இப்படி பயன்படுத்தலாம். வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படும்படி வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஃப்ரிட்ஜ் உங்கள் வீட்டில் இல்லை என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சை தண்ணீரை ஊற்றி, அதில் மாவு டப்பாவை இறக்கி வைக்க வேண்டும். மாவு டப்பாவுக்குள் எவ்வளவு மாவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெளியில் தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டும். மாவு, டப்பா ஃபுல்லா இருக்கும். ஆனா வெளியில இருக்கிற அகலமான பாத்திரத்தில் தண்ணீர் மிக குறைவாக வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.

ஒரு அகலமான மண் பாத்திரம் நிரம்ப தண்ணீரை ஊற்றி, அந்த மண் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் மாவு டப்பாவை வைத்தால், இன்னும் இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து கூட உங்களுடைய இட்லி மாவு புளிக்காது. மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -