இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியாவும் வர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த டிப்ஸ் பாலோ பண்ணி போண்டா சுட்டு பாருங்க சூப்பரா இருக்கும்

idly batter bonda
- Advertisement -

முன்பெல்லாம் வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்காக எல்லா பொருட்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிம்பிளாக ஸ்நாக்ஸ் செய்ய நிறைய ரெசிபிகள் வந்து விட்டது. அதிலும் இட்லி மாவை வைத்து எண்ணற்ற ஸ்நாக்ஸ் வகைகள் செய்யலாம் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் இட்லி மாவை வைத்து மொறு மொறு போண்டா எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த போண்டா செய்வதற்கு அதிகம் புளிக்காத ஒரு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு, 2 ஸ்பூன் ரவை இரண்டையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்து இருந்தால் இப்பொழுது கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரே ஒரு பின்ச் மட்டும் சமையல் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். இது அதிகமாகி விட்டால் எண்ணெய் அதிகம் குடித்து விடும். ஆகையால் கவனமாக சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது 2 மீடியம் சைஸ் வெங்காயம், 2 பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை, 1 கைப்பிடி கொத்தமல்லி என அனைத்தையும் எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவிற்கு நறுக்கி அதை இந்த மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மாவை நன்றாக கலந்த பிறகு தேவைப்பட்டக லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் வேண்டாம். ஒரு வேளை மாவு தண்ணீர் ஊற்றாமலே இளகி இருந்தால் கொஞ்சமாக ரவை, அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சேர்த்த பிறகு மாவை ஐந்து நிமிடம் வரை அப்படியே தட்டு போட்டு மூடி விடுங்கள். ஏனெனில் இதில் சேர்த்து இருக்கும் ரவை கொஞ்சம் ஊற வேண்டும். இந்த நேரத்தில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள். எண்ணெய் நன்றாக சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மாவும் ஊறி இருக்கும் எண்ணையும் நன்றாக காய்ந்து இருக்கும். இந்த நேரத்தில் கைகளில் லேசாக தண்ணீர் தொட்டுக் கொண்டு கலந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து போண்டா போட்டுக் கொள்ளுங்கள். இடையிடையே லேசாக இந்த போண்டாவை திருப்பி விடுங்கள். எல்லா புறமும் நன்றாக சிவந்து வந்த பிறகு எடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: மீந்து போன சாதத்தில் இப்படி ஒரு பஞ்சு போல பணியாரம் சுட்டா எப்படி இருக்கும்? லெஃப்ட் ஓவர் ரைஸ் பணியாரம் ரெசிபி செய்வது எப்படி?

சுவையான இந்த போண்டா உள்ளே ரொம்ப சாப்டாகவும், மேலே கிறிஸ்ப்பியாகவும் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த போண்டாவுக்கு சைடிஷ் ஆக சட்னி வகைகள் எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வெறும் போண்டாவை சாப்பிட்டாலும் கூட பிரமாதமாக தான் இருக்கும். இப்படி மட்டும் சுட்டிங்கன்னா சுடச்சுட போண்டா தீர்ந்து கொண்டே இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -