மீந்து போன சாதத்தில் இப்படி ஒரு பஞ்சு போல பணியாரம் சுட்டா எப்படி இருக்கும்? லெஃப்ட் ஓவர் ரைஸ் பணியாரம் ரெசிபி செய்வது எப்படி?

rice-paniyaram_tamil
- Advertisement -

மீந்து போன சாதத்தில் இப்படி ஒரு பணியாரமா? என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சூப்பரான பஞ்சு போல பணியாரம் எப்படி செய்வது? பொதுவாக சாதம் மீந்து போனால் அதை வைத்து புளி சாதம், லெமன் சாதம் என்று ஏதாவது ஒன்றைத்தான் கிண்டுவோம். ஆனால் ஒரு கப் சாதம் இருந்தாலே ஆச்சரியப்படும் அளவிற்கு பஞ்சு போல மிருதுவான பணியாரத்தை நொடியில் தயார் செய்து அசத்தலாம்! அப்படியான ஒரு பணியாரம் எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – ஒரு கப், தண்ணீர் – முக்கால் கப், ரவை – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, துருவிய கேரட் – ஒன்று, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

மீந்து போன சாதத்தில் சுவையான மிருதுவான பஞ்சு போன்ற பணியாரம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சாதத்துடன் கால் கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து நைசாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த விழுதினை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் சாதம் அளந்த அதே கப்பில் அரை கப் அளவிற்கு ரவை எடுத்து சேருங்கள்.

வறுத்த அல்லது வறுக்காத ரவை எதுவாயினும் பரவாயில்லை. ரவையுடன் மீதம் இருக்கும் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து ஒரு மூடி போட்டு 15 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். ரவை முழுவதும் தண்ணீரில் ஊறி இருக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து ஒருமுறை நன்கு கலந்து விட்டு ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸ் தக்காளி ஒன்றையும் நன்கு கழுவி சுத்தம் செய்து இதே போல பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

- Advertisement -

காரத்திற்கு இரண்டு சிறிய பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி பொடியாக நறுக்கி சேருங்கள். சுத்தம் செய்து நறுக்கிய மல்லி தழை சிறிதளவு, தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் கேரட் இருந்தால் பூ போல துருவி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம், இது ஆப்ஷனல் தான். எல்லாவற்றையும் ஒருமுறை நன்கு கலந்து விட்டு பணியார மாவு போல சரியான பதத்தில் இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் சேர்த்தால் பணியாரம் வராது. வெங்காயம், கேரட் தண்ணீர் விடும் எனவே இந்த தண்ணீரே போதுமானது.

இதையும் படிக்கலாமே:
சின்ன உருளைக்கிழங்கு இருந்தா ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த வெஜிடபிள் கறி செஞ்சி பாருங்க. சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் வெச்சி சாப்பிட்டா கறி குழம்பு கூட தோத்து போய்டும்.

இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து எப்பொழுதும் போல பணியாரக் கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழிகளிலும் ஒவ்வொரு கரண்டி மாவை ஊற்றி நன்கு வேக விட வேண்டும். இந்த பணியாரம் வேகக் கூடுதல் நேரம் எடுக்கும். மீடியம் ஃப்ளேமில் அடுப்பை வைத்து நன்கு ஒரு புறம் வெந்ததும் குச்சியால் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்து சாப்பிட்டால் சூப்பரான பணியாரம் சாஃப்டாக ரெடி!

- Advertisement -