கடைசியாக இருக்கும் இட்லி மாவு புளித்து விட்டால் கீழே கொட்டாமல் இப்படிக் கூட செய்யலாமா? இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

maavu-plant

நாம் பெரும்பாலும் இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு மாவு அரைத்து எப்பொழுதும் ஸ்டோர் செய்து வைத்திருப்போம். வாரத்திற்கு ஒரு முறையாவது இட்லி மாவு அரைத்து வைத்து விடுவோம். இப்படி அரைக்கப்படும் மாவு சில சமயங்களில் சீக்கிரமாகவே புளித்து விடுகிறது. சில சமயங்களில் புளிக்காமல் அடம் பிடிக்கவும் செய்கிறது. மாவு புளிப்பதற்கு அதை நாம் கைகளால் எடுக்கும் விதமும் ஒரு காரணம் தான். அதிக அளவிற்கு கை படாமல் எடுக்கும் பொழுது மாவானது சீக்கிரம் புளிப்பது இல்லை.

idly-maavu

அதிக அளவில் கையை பயன்படுத்தி எடுக்கப்படும் மாவு வெகு சீக்கிரமாகவே புளித்து விடுகிறது. இப்படி புளித்த மாவு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை பயன்படுத்த முடியும். அதற்கு மேல் மிகவும் புளித்து விட்டால் நம்மால் சாப்பிடுவதற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடுகிறது. அந்த மாவை வீணாக கீழே கொட்டி விடுவதுண்டு. இப்படி வீணடிக்காமல் இந்த மாவை வைத்து நாம் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு சீக்கிரமாக புளித்து விட்டால் அதில் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு நறுக்கிய பச்சை மிளகாய்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை போட்டு 15 நிமிடம் ஊற வைத்தால் புளிப்பு தன்மையை ஈர்த்து விடும். இதை வைத்து ஊத்தாப்பம், தோசை போன்றவற்றை ருசியாக செய்து சாப்பிடலாம். அதற்குப் பிறகு அதிக புளிப்பு கொண்ட மாவை செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

adai-maavu

மாவு வெகு சீக்கிரமாக புளிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? அரிசியில் இருக்கும் ஸ்டார்ச் எனப்படும் ஒரு சத்து, சர்க்கரை சத்தை உண்டு செய்கிறது. இந்த சர்க்கரையை மாவில் இருக்கும் நுண்ணுயிர்கள் ஈஸ்ட், பாக்டீரியா போன்றவைகள் சாப்பிட்டு விடுகிறது. அவைகள் அதனை சாப்பிட்டு விட்டு ஆல்கஹால் மற்றும் co2 என்கிற வாயுவை வெளியிடுகிறது.

- Advertisement -

இந்த வாயு தான் மாவை வெகு சீக்கிரமாக நமக்கு புளிப்பு தன்மையை உண்டு செய்கிறது. நீங்கள் என்ன தான் ரெஃப்ரிஜிரேட்டரில் ஸ்டோர் செய்து வைத்தாலும் கூட நான்கிலிருந்து, ஐந்து நாட்களுக்குள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இத்தகைய பாக்டீரியாக்கள் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இவைகளை செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம் நல்ல ஒரு பலன்களை நம்மால் பெற முடிகிறது. செடிகள் நோய் தாக்குதல் இன்றி, பசுமையாக பூத்து குழுங்கும்.

dosai-maavu

மீதமிருக்கும் புளித்த மாவை நன்கு நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு தண்ணீரை சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு தண்ணீரை சேர்த்து நீராக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த நீரை ஒரு நாள் முழுவதும் விட்டு விட்டு மறு நாள் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச் சத்தைக் கொடுக்கும். எந்த வகையான செடியாக இருந்தாலும் சரி, இதனை வேர் மற்றும் இலைகளில் தெளித்து வந்தால் செடிகள் செழிப்பாக வளரும். நீங்களும் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
பூக்காத செம்பருத்தியும் கொத்துக் கொத்தாக பூக்க அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இந்த ஒரே 1 பொருள் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.