ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு என்ன பண்றதுன்னு தெரியலையா? ஒரே ஒரு கப் இட்லி மாவு இருக்கா அது போதுமே, சூப்பரா ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தயார் பண்ணிடலாம் வாங்க.

- Advertisement -

இதுவரைக்கும் இந்த மாவை வைத்து இட்லி தோசை போன்றவை தான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஒரு கப் இட்லி மாவை வைத்து ஒரு ஈவினிங் ரெசிபியை சூப்பரா ரெடி பண்ணலாம் அப்படின்னு உங்களுக்கு எல்லாம் தெரியுமா? இந்த ரெசிபி நல்ல ஒரு ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸ். மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் இந்த ஸ்நாக் இருந்தாலே போதும் தனியா அவங்களுக்காக வேற எதையும் தயார் பண்ண வேண்டாம் வாங்க இந்த ஈஸி ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: இட்லி மாவு -1 கப், அரிசி மாவு -50 கிராம், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி -1 துண்டு பொடியாக நறுக்கியது, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு -1/2 ஸ்பூன், கறிவேப்பிலை கொத்தமல்லி -1கைப்பிடி அளவு , பெருங்காயம் -1/4 டீஸ்பூன், சமையல் சோடா -1/4 டீஸ்பூன், எண்ணெய் -200 கிராம்.

- Advertisement -

இந்த போண்டா செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் ஒரு கப் இட்லி மாவை எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் பச்சரிசியை மாவையும் சேர்த்த பிறகு, வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை கொத்தமல்லி என அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவிற்கு போடியாக நறுக்கிக் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு மிளகு சீரகத்தையும் லேசாக நுணுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சமையல் சோடா, பெருங்காயம், உப்பு என அனைத்தையும் கலந்த பிறகு மாவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். மாவு மிகவும் தண்ணியாக இருப்பது போல் தோன்றினால் கொஞ்சம் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். மாவை போண்டா பதத்திற்கு வரும் படி தயார்செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் எண்ணெய் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீங்கள் தயார் செய்து வைத்து மாவை கைகளில் கொஞ்சமாக தண்ணீர் தொட்டுக் கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போடுங்கள்.

- Advertisement -

தண்ணீர் தொட்டு போடும்போது கையில் மாவு ஒட்டாது போட்டவுடன் அடுப்பை மீடியம் பிளேமிற்கு குறைத்து விடுங்கள் இல்லை என்றால் மேலே நன்றாக நிறம் மாறி வந்துவிடும் உள்ளே மாவு வேகாமல் இருக்கும்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் மாவு அனைத்தையும் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவு போண்டா ரெடி.

இதையும் படிக்கலாமே: கேரட் அல்வாவை இவ்வளவு ஈஸியா கூட செய்ய முடியுமா என்ன? ரொம்ப சுலபமா அட்டகாசமான சுவையில் கேரட் அல்வா. இதுவரைக்கும் சாப்பிடதுலயே இது தான் பெஸ்ட் அல்வான்னு சொல்லுவீங்க.

இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி, என எது இருந்தாலும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இந்த ஈஸியான ஸ்நாக்ஸ் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

- Advertisement -