பூ போன்று மிருதுவான இட்லி செய்யும் முறை

idly

இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. அனைவரும் விரும்பி சுவைக்கும் இட்லி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

idly_1

இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 3 கப்
வெந்தயம் – 1.5 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 கப்
உப்பு – தேவையான அளவு

இட்லி செய்முறை:

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் இட்லி அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் அலசி 3 மணி நேரம் வரைஊற வைக்கவும். பிறகு மற்றொரு பவுலில் உளுந்து போட்டு அதையும் இதேபோன்று ஊறவைக்கவும்.

idly_2-compressed

- Advertisement -

பிறகு ஊறிய உளுந்தினை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைத்த உளுந்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு ஊறவைத்த அரிசியினை கிரைண்டரில் போட்டு தண்ணீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி முழுவதுமாக அரைத்து கொள்ளவும் .

idly_3-compressed

பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவினை சேர்த்து கைகளால் சேர்த்து கரைத்து 8 மணிநேரம் வரை புளிக்க விடவும். 8 மணிநேரம் கழித்து இட்லி மாவு தயாராகிவிடும்.

பிறகு இட்லி மாவினை உப்பு போட்டு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து இறக்கினால் சுவையான இட்லி தயார்.

idly_4-compressed

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
ஐயங்கார் புளியோதரை செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Idly recipe in Tamil. It is also called as Idly seimurai or Idly seivathu eppadi in Tamil or Idly preparation in Tamil.