அட! இந்த இட்லி உப்புமா யாருக்கு தான் செய்யத் தெரியாது அப்படின்னு நினைக்கிறீங்களா? இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணி இட்லி உப்புமா செஞ்சு பாருங்க, இத இட்லில தான் செஞ்சேன்னு சொன்ன யாரும் நம்பவே மாட்டாங்க.

- Advertisement -

இட்லி உப்புமாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்து போட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த உப்புமாவை இட்லியில் தான் செய்தது என்பதே தெரியாத அளவிற்கு எப்படி செய்து கொடுப்பது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி – 5, பெரிய வெங்காயம் -1,பச்சை மிளகாய் – 2, இஞ்சி -1 துண்டு, கருவேப்பிலை -1கொத்து, கடுகு -1 ஸ்பூன், கடலை பருப்பு -1 ஸ்பூன், உளுந்து -1 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இட்லி உப்புமா செய்வதற்கு முன்பாக வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து பேன் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்த உடன் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கிய பிறகு, கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியும் சேர்த்து லேசாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள்.

இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பிறகு மஞ்சள் தூளையும், உப்பையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். இட்லியில் நாம் ஏற்கனவே உப்பு போட்டு தான் செய்திருப்போம். எனவே இந்த வெங்காயத்திற்கு மட்டும் இப்போது உப்பு சேர்த்தால் போதும்.

- Advertisement -

இவை எல்லாம் வதங்கிய பிறகு இட்லியை சேர்க்கும் முன்பாக, ஒரு பவுலில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் இட்லியை முக்கி ( இட்லி மேல் ஈரம் பட்டால் போதும்) எடுத்து அப்படியே நன்றாக உதிர்த்து அதன் பிறகு வெங்காயத்துடன் சேர்த்து கலந்து விடுங்கள். (இட்லியை தண்ணீரில் ஊற வைத்து விடக் கூடாது தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து விட வேண்டும். இது மிகவும் முக்கியம்).

இப்படி செய்யும் போது தண்ணீரில் பட்டவுடன் வறண்ட இட்லி போல் இல்லாமல், உடனடியாக பஞ்சு போல சாப்பிட்டாக மாறி விடும். இதை உதிர்த்து போடும் போது நாம் எப்போதும் செய்யும் உப்புமாவை போல் டிரையாக இல்லாமல், ரவையில் செய்யும் உப்புமாவை போலவே நல்ல சாப்டாக சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். கடைசியாக இறக்கும் பொது கொத்துமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பொட்டுக்கடலை மாவு தேவையில்லை, கடலை மாவு தேவையில்லை, பருப்பு சேர்க்காமல் இட்லி தோசைக்கு இப்படி ஒரு சாம்பார் ரெசிபி இருப்பது நம்ம கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாதுங்க.

இது சாதாரண சிம்பிள் டெக்னிக் தான். நாம் என்ன தான் இட்லி உதிர்த்து போட்டு அல்லது மசாலா, காய்கறிகளை சேர்த்து செய்தாலும் ஒரு ட்ரை பீல் இருக்கும். இந்த முறையில் செய்யும் போது அப்படி இருக்காது மிகவும் சாஃப்டாக இருக்கும். இனி இட்லி உப்புமா செய்யும் போது இப்படி செஞ்சு பாருங்க உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -