- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பொட்டுக்கடலை மாவு தேவையில்லை, கடலை மாவு தேவையில்லை, பருப்பு சேர்க்காமல் இட்லி தோசைக்கு இப்படி ஒரு...

பொட்டுக்கடலை மாவு தேவையில்லை, கடலை மாவு தேவையில்லை, பருப்பு சேர்க்காமல் இட்லி தோசைக்கு இப்படி ஒரு சாம்பார் ரெசிபி இருப்பது நம்ம கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாதுங்க.

- Advertisement -

பருப்பு சேர்க்காமல், பொட்டுக்கடலை மாவு சேர்க்காமல், கடலை மாவு சேர்க்காமல், சாம்பார் எப்படி வைப்பது. யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த டிபன் சாம்பார் ரெசிபியை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் அடுத்த முறை இட்லி செய்யும் போது கட்டாயமாக இந்த சாம்பாரை ட்ரை பண்ணி பாக்கணும். சுட சுட இட்லிக்கு மேலே இந்த சாம்பாரை வார்த்து சாப்பிட்டால் அத்தனை ருசி இருக்கும். சரி சரி நேரத்தை கடத்தாமல் இந்த ஸ்பெஷலான சாம்பாரை எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா?

இந்த சாம்பாரை நாம் பரங்கிக்காயை வைத்து தான் செய்யப் போகின்றோம். சில பேர் இதை மஞ்சள் பூசணி என்று சொல்லுவார்கள். சில பேர் இதை அரசாணிக்காய் என்று கூட சொல்லுவார்கள். இதை வைத்து தான் இன்னைக்கு டிபன் சாம்பார் செய்ய போகின்றோம்.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய் – 250 கிராம், நறுக்கிய தக்காளிப் பழம் – 4, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 7, தோலுரித்த பூண்டு பல் – 2, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சாம்பார் தூள் – 2 ஸ்பூன், இந்த பொருட்கள் எல்லாம் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வையுங்கள்.

உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் வெந்து நமக்கு கிடைத்துவிடும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து இதை நன்றாக ஆற வைத்து, இதில் இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து விடுங்கள். தக்காளி பரங்கிக்காய் இதில் சேர்த்து இருக்கும் மற்ற பொருட்களை எல்லாம் வடிகட்டி அப்படியே எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய தண்ணீரை கீழே கொட்டி விடக்கூடாது. அதையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சாம்பாரை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – மிக சிறிய அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 2 சிட்டிகை, தோலுரித்த சின்ன வெங்காயம் – 7 பல், போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்திற்கு, இப்படியும் ஒரு தக்காளி குருமா வைக்கலாம். ஸ்டார் ஹோட்டலில் ரிச் ஆக கிடைக்கும் அல்லவா. அதே சுவை இந்த குருமாவில் கிடைக்கும்.

வெங்காயம் கண்ணாடி பதம் அளவுக்கு வதங்கி வந்த உடன் இதில் 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, உடனடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, வடிகட்டி வைத்திருகிறோம் அல்லவா அந்த தண்ணீரையும் இந்த சாம்பவரோடு ஊற்றி, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இந்த சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு, மேலே கொத்தமல்லி தழைகளை தூவி ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் சாம்பாரை கொதிக்க வைத்தால் சூப்பரான டிபன் சாம்பார் தயார். சுட சுட இட்லிக்கு மேல ததும்ப ததும்ப இந்த சாம்பாரை ஊற்றி அப்படியே இட்லியை பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசி இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்