உங்கள் வீட்டு பூஜை அறையில் சிலை வழிபாடு செய்கிறீர்களா? இப்படி வழிபட்டால் மட்டுமே பலன் உண்டு.

vikragam-at-home

நமது வீட்டில் எத்தனையோ வகையான சுவாமி படங்களை எவ்வளவு பெரிய அளவில் வைத்து வழிபட்டாலும் அதற்கு சுலபமான வழிபாட்டைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். அதாவது அந்த சுவாமி படங்களுக்கு பொட்டிட்டு, விளக்கேற்றி, தீப, தூப ஆராதனை செய்து, சுத்தமான முறையில் வழிபடுவது அதற்கான சுலபமான முறையாக கருதப்படுகிறது. ஆனால் சிலரது வீட்டில் சுவாமி சிலைகளை வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தெய்வங்கள் சுவாமி படங்களாக இருந்தால், ஒரு வகையான வழிபாட்டையும், அதே தெய்வங்கள் சிலை வடிவில் இருந்தால் அதற்கென்று ஒரு வழிபாட்டையும் நம் சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள். சுவாமி சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் நாம் எப்படிப்பட்ட முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

vikragam

முதலில் நம் வீட்டில் இருக்கும் சுவாமி சிலை 6 அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாது. 6 அங்குலத்திற்கு மேலே உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அர்த்தமில்லை. 6 அங்குலத்திற்கு மேல் சுவாமி சிலைகளை வீட்டில் வைக்கலாம். ஆனால் முறைப்படி தினமும் செய்யவேண்டிய வழிபாட்டு முறையை அந்த சிலைக்கு கட்டாயம் செய்ய வேண்டும். அதாவது கோவிலில் பெரிய அளவிலான சுவாமி சிலையை எப்படி தினந்தோறும் பராமரிக்கிறார்களோ அதேபோல் நம் வீட்டிலும் முறையான பூஜை புனஸ்காரங்களை செய்து, அபிஷேகமும், நெய்வேதியமும் முறைப்படி செய்ய வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் வீட்டில் இப்படிப்பட்ட பூஜைகளை செய்வது என்பது சாத்தியமில்லை என்பதால் 6 அங்குலத்திற்கு மேல் உள்ள சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.

6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைக்கு அபிஷேகங்களும், ஆராதனையும், நெய்வேதியம் தேவையில்லையா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சுவாமி சிலைக்கும் நிச்சயமாக அபிஷேகமும், நைய்வேதியம், தீபாராதனையும் அவசியம். ஆனால் தினந்தோறும் இதனை கடைபிடிக்க முடியாதவர்கள் வாரம் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வழிபாட்டினை செய்யலாம் என்று கூறுகிறது சாஸ்திரம்.

vikragam1

இதேபோல் நம் வீட்டில் இருக்கும் சிலையானது தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம், வெங்கலம் இவை ஐந்தும் கலந்த ஐம்பொன்னாலான சிலையாகவோ அல்லது இவைகளில் ஏதேனும் ஒரு உலகத்தில் செய்த சிலையாகவோ இருக்கலாம். சில பேர் வீட்டில் கல்லினாலான சிலைகளை வைத்திருப்பார்கள். கல்லில் செய்யப்பட்ட 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலையாக இருந்தாலும் தினந்தோறும் அபிஷேகமும், நைய்வேத்தியமும், ஆராதனையும் மிகவும் அவசியம்.

- Advertisement -

அடுத்ததாக நம் வீட்டில் ஒரு தெய்வத்தின் சிலை ஒன்று என்ற எண்ணிக்கையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அம்மனுக்கு ஒன்று, சிவனுக்கு ஒன்று, விநாயகருக்கு ஒன்று, முருகருக்கு ஒன்று இப்படி இருக்கலாம். அம்மன் சிலை இரண்டு, முருகன் சிலை இரண்டு என்ற கணக்கில் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறுகிறது சாஸ்திரம். அப்படி வைத்திருப்பவர்களுக்கு பூஜை முறைகள் வேறுபடும். வீட்டில் அதைப் பின்பற்றுவது அவ்வளவு சுலபமல்ல. இதனால் வீட்டில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு சிலைகளை மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.

vikragam2

சிலருக்கு வீட்டில் நடராஜர் சிலை வைக்கலாமா என்ற சந்தேகம் இருந்து வரும். நடராஜர் சிலையையும் 6 அங்குலத்திற்கு கீழ் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்தவரை 6 அங்குலத்திற்கு கீழே உள்ள சிலைகளுக்கு தினம் தோறும் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, தினந்தோறும் நெய்வேதியம் வைப்பது மிகவும் சிறப்பானது. பழவகைகளையோ அல்லது பேரீச்சம் பழத்தையோ அல்லது கற்கண்டு மட்டுமாவது நைவேத்தியமாக படைப்பது மிகவும் நல்ல முறை. நீங்கள் வீட்டில் தினம்தோறும் செய்யும் சாதத்தில் கூட சிறிதளவு நெய் விட்டு, எச்சில் படுவதற்கு முன்பு அந்த இறைவனுக்கு நெய்வேதியமாக படைக்கலாம். உங்களால் பூஜை புனஸ்காரங்களை முறையாக செய்ய முடியும் என்றால் மட்டும் வீட்டில் சுவாமி சிலைகளை வைத்துக்கொள்ளுங்கள். முடியாதபட்சத்தில் சுவாமி படங்களுக்கு மனதார செய்யப்படும் பூஜைகள் கூட அந்த இறைவனை போய்ச்சேரும்.

இதையும் படிக்கலாமே
இறைவனை வழிபடும் நேரத்தில் கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Silai vazhipadu in Tamil. Vikraga valipadu murai in Tamil. Vettil vikraga vazhipadu Tamil. Silai valipadu eppadi seivathu Tamil.