இடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த முத்திரை செய்தால் போதும்

Iduppu-vali

மனிதர்கள் நடமாட இன்றியமையாததாக இருக்கும் ஒரு உடல்பாகம் இடுப்பு. சிலருக்கு இந்த இடுப்பு எலும்புகள் தேய்மானம் காரணமாகவும்,மற்ற காரணங்களாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது. அதை நீக்குவதற்கான முத்திரை தான் இது.

Back Pain (iduppu vali)

முத்திரை செய்யும் முறை:

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும்.

பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

Iduppu vali muthirai
இடுப்பு வலி முத்திரை

இப்போது உங்கள் இருக்கைகளில் உள்ள நடு விரல்களை மடக்கி, அதன் மீது உங்கள் கட்டைவிரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியது போல் வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்.

- Advertisement -

இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

back pain

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் நீண்ட நாட்களாக இருக்கும் இடுப்பு வலி நீங்கும். உடலிலுள்ள விஷக்கழிவுகள் நீங்கி உடலும், மனமும் புத்துணர்வு பெறும். சிலருக்கு நடக்கும் போது ஏற்படும் தடுமாற்றங்கள் இம்முத்திரை பயிற்சி செய்வதால் நீங்கும். மூலாதார சக்கரம் சக்தி பெறும்.

இதையும் படிக்கலாமே:
சக்கரை நோய் குணமாக யோகா முத்திரை

இதுபோன்ற யோக முத்திரைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:

Here we have Mudra for back pain in Tamil. It is also called as Iduppu vali vaithiyam or Iduppu vali ki marunthu or Muthirai.