சக்கரை நோய் குணமாக யோகா முத்திரை

sakkarai-noi-kuriaya

இன்று உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தும் ஒரு உடலாரோக்கிய குறைபாடாக “சர்க்கரை நோய்” அல்லது “நீரிழிவு குறைபாடு” உருவெடுத்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடாக நம் இந்திய நாடு இருக்கப்போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் அதற்குண்டான மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு இந்த லிங்க முத்திரையும் செய்வதால் இந்த நீரிழிவு பாதிப்பின் தீவிரத்தன்மையைக் குறைக்க முடியும். இம்முத்திரையை செய்யும் முறை பற்றி இங்கு காண்போம்.

yoga mudra in Tamil

முத்திரை செய்யும் முறை:

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் அனைத்து விரல்களையும் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது உங்கள் இடது கை கட்டை விரலை மட்டும் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் ஒரே சீராக உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இந்த முறையில் இந்த முத்திரையை தினமும் காலை மற்றும் மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

பலன்கள்:

- Advertisement -

இம்முத்திரையை நீரிழிவு குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து செய்து வரும் போது அவர்களின் உடலின் மெட்டபாலிசத்தை அளவு சமநிலையை அடையும். அதன் காரணமாக அவர்களின் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் கொண்டு வரும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் அசதி நீங்கும். சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

Diabetes(sakakrai noi)

குறிப்பு:

இம்முத்திரையை செய்யும் போது எக்காரணம் கொண்டும் நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளை நிறுத்தக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
மூட்டுவலி நீங்க உதவும் யோக முத்திரை

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், நோய் தீர்க்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Diabetes yoga tips in Tamil. This is also called as Sakkarai noi yoga in Tamil. By doing that regularly one can observe good improvement in health.