உங்கள் இல்லத்தில் பறவைகள் கூடு கட்டியிருந்தால் என்ன பலன் தெரியுமா?

nest2

பொதுவாகவே பறவைகள் கூடு கட்டுவதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்ட கட்டிட வேலை பாதியில் இருக்கும் மனையில் அல்லது குடியிருக்க முடியாத சூழ்நிலையில் பூட்டிவிடபட்ட வீடுகளில் பெரும்பாலும் பறவைகள், அணில்கள் கூடு கட்டி வாழ ஆரம்பித்து விடும். இந்த ஜீவன்கள் அங்கு நிம்மதியாக தான் இருக்கும். ஆனால் அங்கு மனிதன் நுழைந்த உடன் ஒருவிதமான அமானுஷ்ய உணர்வை அனுபவிப்பான். அந்த அழகிய கூட்டை கலைத்து விடுவான். உண்மையில் பறவைகள் கூட்டை விசித்திர உணர்வோடு அணுக வேண்டியதில்லை. பறவைகள் கூடு கட்டுவதால் நமக்கு நன்மையா? தீமையா? என்று இப்பதிவில் விரிவாக காண்போம் வாருங்கள்.

nest

புறா, குருவி, அணில் போன்ற ஜீவன்கள் தான் வீடுகளில் அதிகம் கூடு கட்டும் உயிரினங்கள். இவற்றிடம் மனிதனை விட அதிகளவு ஜீவ சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இவைகளுக்கு தெய்வீக ஆற்றலை அறியும் திறன் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இது போன்ற உயிரினங்கள் இல்லத்தில் இருப்பது மனிதனுக்கு நன்மையே தரும். தீய சக்திகள் வீட்டில் இருந்தால் இந்த உயிர்கள் அங்கு தங்காது. இது ஒரு நல்ல அறிகுறியாக தான் இருக்கும். எனவே புறா, அணில், குருவி போன்ற உயிரினங்கள் உங்கள் இல்லத்தில் கூடு கட்டி இருந்தால் அதை கலைக்க முற்படாதீர்கள்.

முற்காலத்தில் வீட்டு வாசலில் நெற்கதிர்களை சொருகி வைத்திருப்பார்கள். இது போன்ற பறவை இனங்கள் அவற்றை உண்டு அங்கேயே தங்கி அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரவல்லது என்று அவர்கள் நம்பியிருந்ததே அதற்கு காரணம்.

birds

புதிதாக கட்டிய இல்லத்தில் பறவைகளை வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். தெய்வீக ஆற்றலை இல்லம் முழுவதும் பரவ செய்யும். தீவினைகள் நம்மை நெருங்காது. எவ்வளவோ செலவளித்து, வாஸ்து பார்த்து புதிய வீடு கட்டி இருப்பார்கள். ஆதலால் கூட்டை கலைத்து அந்த பாவத்தை பெற்று கொள்ளாமல் இருப்பது நல்லது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் யாராவது செய்திருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பறவைகளுக்கு தான் முதல் பாதிப்பு இருக்கும். அதை வைத்தே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். பறவைகள் என்று இல்லை. நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் கூட தீய சக்திகளிடம் இருந்து உங்களை காப்பாற்றும் வல்லமை பெற்றது.

- Advertisement -

nest1

இவற்றில் குருவி இனங்கள் சிறப்பு மிக்கவை. இவை பெரும்பாலும் நம்முடன் ஒன்றி இருக்கவே விரும்பும். இதற்கு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வரும் திறன் உள்ளது. இதன் ஜீவ சக்தியால் பல பிரச்சனைகளில் இருந்து நம் இல்லம் காக்கபட்டு சுபீ்க்ஷம் அடையும். குருவி இனங்கள் இன்றைய காலத்தில் மறைந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. நகரமயமாதலினால் மனிதன் பல நல்ல விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறான். ஜீவ ராசிகளுக்கு உணவு அளிப்பது, அதன் வாழ்வாதாரத்தை அழிக்காமல் பாதுகாப்பது நல்ல விஷயங்களே அன்றி அதனால் கெடுதல் ஒன்றும் நேர்ந்து விட போவதில்லை. எனவே உங்கள் இல்லத்தில் பறவைகள் கூடு கட்டினால் அதனால் அபசகுனம் என்று எண்ணி கலைத்து விடாதீர்கள். உங்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் கூட்டை அப்படியே ஏதாவது ஒரு மரத்திற்கு கொண்டு சென்று உயரமாக வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
தீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil kuruvi koodu kattinal nallatha. Kuruvi koodu palan in Tamil. Kuruvi koodu in home in Tamil. Kuruvi koodu in Tamil.